மிகச் சிறிய உருவத்தில்...
சென்னை கந்தக்கோட்டம் முருகப்பெருமான் கோயில் புராதனப் பெருமை மிக்கது. முருகன் வள்ளி தெய்வயானையுடன் மிகச் சிறிய உருவத்தில் காட்சி அளிக்ககூடிய மூலவர் வேறெங்கும் காணமுடியாது.
சென்னை கந்தக்கோட்டம் முருகப்பெருமான் கோயில் புராதனப் பெருமை மிக்கது. முருகன் வள்ளி தெய்வயானையுடன் மிகச் சிறிய உருவத்தில் காட்சி அளிக்ககூடிய மூலவர் வேறெங்கும் காணமுடியாது. தொழில்கள் செய்வோருக்கு வேலையாட்கள் கிடைப்பதற்கு முருகப் பெருமானை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
மதுரையிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாதவூர். இது மாணிக்க வாசகர் பிறந்த ஊர். வேத நாயகி சமேத வேத நாதர் ஆலயம் இங்கு பிரசித்தி பெற்றது. இங்கு சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நல்லெண்ணெய் வாத நோய்களைக் குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை தரிசிக்க வருபவர்கள் அங்கிருக்கும் பவளக்கனிவாய் பெருமாள் சந்நிதியை அவசியம் தரிசிக்க வேண்டும். இந்தப் பெருமாளை வேண்டிக்கொண்டால் வியாபாரத்தில் வெற்றி பெறலாம் என்பது
நம்பிக்கை.
அருப்புக்கோட்டை அருகே கமுதியில் அமைந்துள்ளது முத்து மாரியம்மன் கோயில். இந்த அம்மனுக்கு செய்யப்படும் அலங்காரம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள பைரவரை அஷ்டமி தினங்களில் வழிபட்டால் கடன் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை.
-ஆர்.வி.