சாட்சி விநாயகர்!
திருச்சானூரில் பெருமாளும் தாயாரும் திருமணம் செய்து கொள்ள சாட்சியாக இருந்த விநாயகர் "சாட்சி விநாயகர்' என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
திருச்சானூரில் பெருமாளும் தாயாரும் திருமணம் செய்து கொள்ள சாட்சியாக இருந்த விநாயகர் "சாட்சி விநாயகர்' என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். பெருமாள் தாயாருடன் சேர்ந்து இருக்கும் விநாயகரை இங்கு தான் தரிசிக்க முடியும். குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்க இங்கு வந்து மணி கட்டி வழிபாடு செய்து வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகில் உள்ளது காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இக்கோயிலின் பிரசாதம் அங்குள்ள கிணற்று நீர்தான். இந்த கிணற்றில் தான் சுயம்புவாக வரசித்தி விநாயகர் தோன்றினார். அதனால் அதே கிணற்றின் மேல் தான் அவர் காட்சி தருகிறார். விநாயகரைச் சுற்றிலும் எப்போதும் கிணற்றின் நீர் ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்தப் பிள்ளையாரை சாட்சியாக வைத்து ஒரு காலத்தில் வழக்குகளை முடித்துக் கொள்வார்களாம். அதனால் இன்றும் வழக்குகளில் வெற்றி பெற இந்த விநாயகரை வழிபட்டு வருகின்றனர்.