வெள்ளிமணி

பொன்மொழிகள்!

சந்தர்ப்பம் வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதுதான் வெற்றிக்கு அடிப்படையாகும். 

சுவாமி கமலாத்மானந்தர்

சந்தர்ப்பம் வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதுதான் வெற்றிக்கு அடிப்படையாகும். 
-நீதி சாஸ்திரம்

ஹே தேவி! என் மூச்சுக்காற்று என்னைக் கைவிட்ட  போதிலும், என் நாவானது உனது புனித நாமத்தை ஜபம் செய்துகொண்டிருக்க வேண்டும் - இதையே நான்  உன்னிடம் வரமாகக் கேட்கிறேன்.  
-ஸ்ரீ ஆதிசங்கரர்

மேரு மலையை வில்லாகக் கொண்டவர், வெள்ளிமலையான கைலாயத்தின் சிகரத்தில் வசிப்பவர், நாகராஜனை நாண்கயிறாகக் கொண்டவர், திரிபுரர்களை அழித்தவர், தேவர்களால் துதிக்கப்பட்டவர்  - அப்படிப்பட்ட சந்திரசேகரனான பரமேஸ்வரனை நான் சரணடைகிறேன். என்னை மரணதேவன் யமனால் என்ன செய்ய முடியும்? 
-மார்கண்டேய மகரிஷி இயற்றிய  ஸ்ரீசந்திரசேகராஷ்டகம் 

கடலுக்குள் ஆமை வாழ்கிறது. அது முட்டையிடுவதற்கு கரைக்கு வந்துவிடும். அதுபோல், கோயிலில் குடியிருக்கும் தெய்வம் மனிதன் பக்தி செய்து வேண்டும்போது, அவனுடைய உள்ளத்திலேயே இல்லம் அமைத்துக்கொள்வான். 
-சிவ வாக்கியர் 

நாளை செய்ய வேண்டுமென்றால், அதை இன்று செய். இன்று செய்ய வேண்டுமென்றால், அதை இப்போதே செய். ஒரு கணத்தில் பிரளயமே வந்துவிடலாம்; பின்னர் என்ன செய்து என்னதான் பயன்? 
-மகான் கபீர்தாசர்

எல்லோரும் சித்தர்களாக ஆகிவிட முடியாது. தனது சித்தத்தை அடக்குவது என்பது கடினம். ஆனால் சிறந்தவர்களாக விளங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்; மக்கள் தங்களின் எண்ணங்களில் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
-மயான யோகியார்  

உலகியல் ஆசைகளை விட்ட நிர்மலமான மனதை, விஷ்ணுவின் திருவடிகளில் குவிக்க வேண்டும். 
-சப்தரிஷிகள் துருவனுக்குச் சொன்னது

""ஈசன்'' என்று கருதி எல்லா உயிர்களையும் நேசத்தால் நினைத்துக்கொள்.
 -ஒளவை குறள் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT