வெள்ளிமணி

பொன்மொழிகள்!

மனிதப்பிறவி அரிதாயினும் அதுவே மிகுதியும் அஞ்சத்தக்கது. ஏனென்றால் அவர்கள் தம் செய்கையால் இந்தப் பிறவியினின்றும் மேலாயினும் கீழாயினும் போகக்கூடும்.

சுவாமி கமலாத்மானந்தர்

மனிதப்பிறவி அரிதாயினும் அதுவே மிகுதியும் அஞ்சத்தக்கது. ஏனென்றால் அவர்கள் தம் செய்கையால் இந்தப் பிறவியினின்றும் மேலாயினும் கீழாயினும் போகக்கூடும்.
-பாம்பன் சுவாமிகள்
இனி என் வாழ்க்கை மற்றவர்களுக்குத் தொண்டு செய்வதற்கு மட்டுமே எஞ்சியுள்ளது.
-துக்காராம்
நீ உலக மக்களின் போற்றுதலையோ, தூற்றுதலையோ மனதில் வாங்கிக்கொள்ளாதே!
- ஸோபான பஞ்சகத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர்
காலசொரூபியான பகவான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். அதனால் சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், பிரளயம் எனப்படும் இந்தத் தொடர்புக்கு முடிவே கிடையாது.
-விஷ்ணு புராணம்
அஹிம்சைதான் தர்மமாகும். அதர்மத்தினால் கிடைத்த பொருளை, ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான் விரதமாகும். ஆசையின்றி வாழ்வதுதான் தவமாகும். யாரிடமும் சூதுவாது இன்றி நடந்துகொள்வதுதான் பக்தியாகும். சுகம், துக்கம் இரண்டிலும் ஒன்றாக இருப்பதுதான் ஆச்சாரமாகும்; இது சத்தியம், இதற்கு பகவானே! நீங்கள்தான் சாட்சி.
-மகான் பசவேசர் (கர்நாடக மாநிலம்). 
ஒரு பெரிய மலைகூட, இருந்த இடம் தெரியாமல் மறையலாம். ஆனால், சத்தியம் ஒருநாளும் நிலை மாறாது.
-ராமகீதை
பரந்த செல்வத்திலோ, கொடிய விசனத்திலோ மனிதனை வினைப்பயன் கயிற்றால் கட்டி இழுப்பதுபோல் இழுக்கிறது.
-வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம்-37.3
தெய்வத்தைக் காட்டிலும் பெரியவனாக தொண்டன் இருக்கிறான். ஏனென்றால் தெய்வத்தை அவன் தன் உள்ளத்தில் வைத்திருக்கிறான்.
-பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
இளமை, செல்வம், யாக்கை ஆகியவைகள் நிலையற்றவையாகும். ஆதலால் அவை நிலைத்திருக்கும்
பொழுதே இறைவனை வணங்க வேண்டும்.
 -குமரகுருபரர்
நிறைவுற்ற மனம் உடையவன், எல்லாச் செல்வங்களையும் அடைந்தவனாகிறான். ஆமாம், கால்களில் தோல் செருப்பு போட்டுக்கொண்டிருப்பவனுக்குப் பூமி முழுவதும் தோல்கொண்டு மூடியதாக இருக்கும் அல்லவா?
 -பஞ்ச தந்திரம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT