வெள்ளிமணி

மணியோசை

DIN

"பொருநை போற்றுதும்" தொடரில் இயந்திரங்களைச் சேதப்படுத்தாமல் ஊழியர்களின் வேலை நிறுத்தம் மூலம் நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுத்த சுப்பிரமணிய சிவாவின் எழுச்சிமிக்க உரையும், அதன் தாக்கமும் அறிந்து மகிழ்ந்தேன். டாக்டர் சுதா சேஷய்யனுக்கு நன்றி..!
-என்.வி.சீனிவாசன், புது பெருங்களத்தூர்.

பெரியபாளையம் பவானி அம்மனின் வரலாற்றை இதற்கு முன்பு படித்திருந்தாலும் மீண்டும் படிக்கும் பொழுது புதுமையாகத் திகழ்ந்தது. ஜி.ஏ.பிரபாவின் "தேவியின் திருத்தலங்கள்' தொடர் அருமையான பதிவு. படித்துப் பாதுகாத்து வருகிறேன்..!
-எஸ்.கிருஷ்ணசாமி, ஆவடி.

"63 நாயன்மார்களில் ஒருவர்தான் சண்டிகேஸ்வரர்' என்பதை அறிய வைத்தது "காசியாத்திரை பலனை முழுமையாகப் பெற...' கட்டுரை. அவருக்கு ஏன் ஈஸ்வரர் என்ற பட்டம் கிடைத்தது என்பதை சிவ புராணத்தின் மூலம் அறிய வைத்த கட்டுரையாளர் மாலதி சந்திரசேகரனுக்கு பாராட்டுகள்..!
-ந. சண்முகம், திருவண்ணாமலை. 

பா. சுஜித்குமார் எழுதிய "எழுந்திரு பறவையே!' கட்டுரை வாசித்தேன். ராமாயணத்தில் ராவணன் ஜடாயுவை வென்றதும், ராமன் "லே பாக்ஷி' என்று குறிப்பிட்டு உயிர் பெறச் செய்ததும், அதற்காக அங்கு கருடனின் மிகப் பெரிய சிலை வடிவமைக்கப்பட்டுள்ள செய்தியும் அற்புதம்..!
-கூத்தப்பாடி பழனி, பென்னாகரம்.

ரஞ்சனா பாலசுப்பிரமணியன் எழுதிய "பஞ்ச பூத சக்தி' கட்டுரை மூலம் சாக்த வழிபாடு குறித்தும், முக்கியமான நான்கு நவராத்திரிகள் பற்றியும் அறிந்தது மிகவும் பயனாக இருந்தது. 
-செந்தி மாரீஸ்வரி, தேனி.

பொ.ஜெயச்சந்திரன் எழுதிய கட்டுரை மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கன்னம்பள்ளி கிராமத்திலுள்ள "பசு கண்டெடுத்த பெருமாள் கோயில்' பற்றி பலர் அறியச் செய்தது பாராட்டத்தக்கது.
-லேகா விஷ்ணு, சிறுகளத்தூர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT