வெள்ளிமணி

பொன்மொழிகள்!

ஒரு நாடு, பெரிய எண்ணங்களைக் கொண்ட சிறிய மனிதர்களால்தான் வலிமை பெறுகிறது; சிறிய எண்ணங்களைக் கொண்ட பெரிய மனிதர்களால் அன்று.

சுவாமி கமலாத்மானந்தர்

ஒரு நாடு, பெரிய எண்ணங்களைக் கொண்ட சிறிய மனிதர்களால்தான் வலிமை பெறுகிறது; சிறிய எண்ணங்களைக் கொண்ட பெரிய மனிதர்களால் அன்று.
-சுவாமி தீர்த்தர் 

ஒருவன் பல பாவங்கள் செய்திருந்தாலும், அவன் உறுதியான நம்பிக்கையுடன் தெய்வப் பணியில் ஈடுபட்டால், உலகம் அதிசயத்தக்க மகானாக மாறுவான்.
-மகான் ஞானேஸ்வரர்

எது நடைபெற முடியாதோ அது ஒருபோதும் நடைபெறாது; எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும். தண்ணீரில் வண்டி ஓடாது; தரையில் ஓடம் ஓடாது.
-ஹிதோபதேசம்

""இறைவனே இல்லை'' என்று உறுதியோடு கூறுபவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளாதீர்கள்.
-வடலூர் வள்ளலார்

நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட கோவேறு கழுதைகள், உயர்ந்த ஜாதிக் குதிரைகள், உன்னத யானைகள் சிறப்பு வாய்ந்தவையாகும்; அவை எல்லாவற்றையும்விட, தன்னையே கட்டுப்படுத்திக் கொண்ட மனிதன் சிறப்பானவன்.
-தம்மபதம்

கிடைத்த பொருளில் திருப்தியடையும் மனிதனுக்கு வீடும், காடும் ஒன்றுதான்.
-துளசி ராமாயணம்

எந்த இடத்தில் நாம் பணக்காரராக இருந்தோமோ, அந்த இடத்தில் ஏழையாக இருப்பது உத்தமமன்று.
-பஞ்சதந்திரம்

காலையில் எழுந்ததும், ""இறைவா! நான் நல்ல வழியில் வாழ்வதற்கு அருள் புரியுங்கள்'' என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
-இந்து மதம்

நம்முடைய பக்தி மார்க்கத்திற்கு இன்னல்கள் இழைப்பவர்கள் யாராயினும், அவர்களை நாம் விலக்க வேண்டும். ஸ்ரீசீதாராமனுக்கு எவன் விரோதியோ, அவன் நண்பனாயினும் எனக்கு பகைவனே.
-துளசிதாசர் இயற்றிய "வினய பத்ரிகா'

இரவு நேரத்தில் நாம் செல்லும் வழி நன்றாகக் கண்களுக்குத் தெரிவதற்காக, கையில் விளக்கெடுத்துச் செல்வது வழக்கம். கையில் விளக்கு இருந்தும், எதிரில் இருப்பது கடல் என்பது நன்றாகத் தெரிந்தும் கடலில் சென்று விழுந்தால் என்ன செய்ய முடியும்? அதுபோல, நம் உள்ளேயே இறைவன் இருப்பதை அறிந்தும், நாம் அதை அறியாமல் வீழ்வது ஏன்?
-இடைக்காட்டுச் சித்தர்

மனிதனுடைய மனம் பரம்பொருளை நாட வேண்டும். ஓர் அறையில் பூந்தொட்டியில் வளரும் கொடி ஜன்னல் வழியாக ஒளியை நாடிச் செல்கிறது. அதுபோல் நமது மனம் பக்தியில் பக்குவம் ஆக வேண்டும்.
-வேதாந்தம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT