வெள்ளிமணி

பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

DIN

இந்த உடம்பு சாம்பலாகிவிடும். உடம்பிலிருந்து வெளியேறுகின்ற பிராணன் எங்கும் நிறைந்த அழிவற்ற பிராணனுடன் கலந்துவிடும். ஓம்! மனமே! செய்தவற்றை நினைத்துப் பார். மனமே செய்தவற்றை நினைத்துப் பார்.
-ஈசாவாஸ்ய  உபநிஷதம் - 17

செய்ய வேண்டியதையும் தெரிந்துகொள்ள வேண்டும், செய்யக் கூடாததையும் தெரிந்துகொள்ள வேண்டும், செயல் புரியாமல் இருப்பது பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். செயல்களின் போக்கு ஆழமானது.
-பகவத்கீதை 4.17

மனிதனிடம் தீமையின் ஓர் அம்சமும் இருக்கிறது. அதுவே கீழ்த்தரமான ஆசைக்கு இலக்கான ஆன்மா. அதுவே வெறிக் குணத்திற்கும், காமத்திற்கும் இருப்பிடமாக இருக்கிறது. அதுவே நாம் இறைவனுடன் தொடர்பு கொள்வதற்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது.  
-தர்ம சித்தாந்தம்

நூறுகோடி சாஸ்திரங்களாலும் வெகுவாய்ப் பேசுவதாலும் இங்கு ஆக வேண்டியதென்ன? சிறந்த குரு கிருபையாலன்றி சித்தத்தில் சாந்தி அடைதற்கரிது. 
-குரு கீதை - 2.20

அருணோதயத்தால் இருள் முதலில் நீக்கப்பட்டு, பிறகு சூரியன் தானே பிரகாசிக்கிறது. அதுபோலவே, ஞானத்தால் அக்ஞானம் நீக்கப்பட்ட ஆன்மா பிரகாசிக்கும்.
-ஸ்ரீ ஆதிசங்கரர்

எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தால் என்ன? வழிப்போக்கனுக்கும் நிழல் தராமல், எளிதில் பறித்து உண்ணவும் வகையில்லாமல், உயரத்தில் பழத்தைக் குலை குலையாகச் சுமந்து நிற்கும் பேரீச்சை மரம்போல் இருந்து என்ன பயன்?

கொடுக்கும் குணமுடையவனே உயர்ந்தவன்; பிறருடைய துன்பங்களை உணர்ந்து, தானே உதவி செய்ய முன்வருகிறானே  அவன்தான் உயர்ந்தவன்; மற்றவர்களது துயரத்தை உணர முடியாதவன்தான் நாஸ்திகன்.
-மகான் கபீர்தாசர்

இப்போது இறைவன் அருளால் எனக்கு செல்வம் கிடைத்திருக்கிறது. இதை நான் மட்டும் அனுபவித்தாலோ, சேர்த்து வைத்தாலோ, அந்தச் செல்வம் சவத்திற்கும் சமம். ஆனால் அதைப் பிறரோடு பங்கிட்டுக்கொண்டால், அது இறைவன் பிரசாதம் ஆகிவிடும்.
-குருநானக்

அகந்தை உதிக்கும்போது எல்லாமும் தோன்றும். அகந்தை இல்லாதபோது எல்லாமும் இல்லாமல் போகும். இதனால் அகந்தையே எல்லாமும் ஆகும். ஆகையால் இந்த "அகந்தையின் உண்மை என்ன?' என்று விசாரிப்பதே எல்லாவற்றையும் விடுவதாகும்.
-ஸ்ரீ ரமண மகரிஷி 

நன்றாகக் கனிந்த பழத்தில் சாறு நிறைந்திருக்கிறது. அதுபோல் இறைவன் எல்லாப் பொருள்களிலும் இரண்டறக் கலந்திருக்கிறான். அத்தகைய ஈசனை மனம் ஒன்றி வணங்கினால் நம் உணர்வுகளும் ஒடுங்கி ஈசனின் நிலையை  அடையலாம்.
-அவ்வையார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT