வெள்ளிமணி

குரு பலம் என்றால் என்ன?

ஒருவர் பிறந்த ராசியிலிருந்து குரு பகவான் 2, 4, 7, 9, 11-ஆம் ராசிகளில் சஞ்சரிக்கும் காலம் குரு பலம் கூடுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி

ஒருவர் பிறந்த ராசியிலிருந்து குரு பகவான் 2, 4, 7, 9, 11-ஆம் ராசிகளில் சஞ்சரிக்கும் காலம் குரு பலம் கூடுகிறது என்று கூறப்பட்டுள்ளது. குரு பகவான் வக்கிரம் பெற்று சஞ்சரிக்கும் காலங்களில் மற்ற ஏழு ராசிகளுக்கும் குரு பலம் உண்டாகும் என்றும் கூறுகிறோம்.

குரு பகவான் பலம் பெற்று கேந்திர திரிகோணங்களில் அமர்ந்தால், 3 லட்சம் தோஷங்களைப் போக்குவார் என்று நம்பப்படுகிறது.  பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் அதிகாரம் 10 சுலோகம் 24-இல், புரோகிதர்களில் நான் குரு பகவான் என்று பிரகஸ்பதியை (தேவகுரு) சிலாகித்துக் கூறுகிறார்.

கஜகேசரி யோகம்: லக்னத்திற்கோ அல்லது சந்திர பகவானுக்கோ 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் குரு பகவான் இருப்பதால்  கஜகேசரி யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் துன்பங்கள் சிங்கத்தைக் கண்ட யானைகள் போல் ஓடிவிடும் என்பதே பொருளாகும்.

கஜம் என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம் என்று பொருளாகும். நல்லதோர் வாழ்வும் உண்டு. உயர்ந்த வாழ்க்கை நிலை, புகழ், நீண்ட ஆயுள், பணவசதி, உயர்பதவி, சுகபோகம் ஆகியவைகள் உண்டாகும்.  நல்ல பெயரும் உண்டு. பகைவர்களை வெல்லும் திறமை உண்டாகும்.

மறைந்த குரு நிறைந்த நிதி: மறைவு ஸ்தானங்களுக்கு அதிபதியாகி லக்னத்திற்கோ, ராசிக்கோ மறைவு பெற்றால் குருபகவான் நன்மையே செய்வார்.  இது -கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்- என்ற வழக்கின் படி உண்மையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைரலான இன்ஸ்டா ரீல்ஸ்... வசூல் வேட்டையில் துரந்தர்!

ஒரு லட்சத்தைக் கடந்த தங்கம் விலை: புதிய உச்சம்!

பிக் பாஸ் வீட்டிலிருந்து ரம்யாவுடன் வெளியேறினார் வியானா!

விஜய்யின் தவெகவில் இணையவுள்ள சின்ன திரை பிரபலங்கள்!

ஜன. 9ல் கடலூரில் தேமுதிக மாநாடு! விடியோ வெளியிட்டு பிரேமலதா அழைப்பு!

SCROLL FOR NEXT