வெள்ளிமணி

பொன்மொழிகள்!

DIN

கங்கை நதி சொர்க்கத்திலிருந்து சிவன் தலையிலும், அங்கிருந்து இமயத்திலும் விழுகிறது. பிறகு உயர்ந்த இமயத்திலிருந்து பூமியில் இறங்கி ஓடி அலைந்து, இறுதியில் உப்புக்கடலில் கலந்து தனது உயர் தன்மையையும், தூய்மையையும் இழந்து படிப்படியாகத் தாழ்மையை அடைகிறது. இதுபோல கீழ்நோக்கிச் செல்லும் அவிவேகிகளும் பல வகையில் தாழ்மையை அடைகின்றார்கள்.
-பர்த்ருஹரியின் நீதி சதகம், 10.

பக்திநெறி, ஆத்மஞானம் அடைவதற்கான வழிகளைக் கூறும் சிறந்த ஒரு நெறியாகும். பகட்டிற்காக, "பிறர் புகழ வேண்டும்' என்பதற்காகச் செய்யும் செயல்கள் உண்மையான பக்தியாவதில்லை.
-தாசிமய்யா (கர்நாடக மாநிலம்) 

இது வரை நான் எடுத்த பிறவிகள் எத்தனை? அந்தப் பிறவிகளில் நான் பட்ட துன்பங்கள் எத்தனை? அத்தனையும் நீ அறிவாய் அல்லவா? பராபரமே!
-தாயுமானவர், பராபரக்கண்ணி } 44

சோகம் தைரியத்தை அழித்துவிடுகிறது. சோகம் கேள்விஞானத்தை அழித்துவிடுகிறது. சோகம் அனைத்தையும் அழித்துவிடுகிறது. சோகம் போன்ற பகைவன் வேறு இல்லை.
-வால்மீகி ராமாயணத்தில் கெüசல்யை தசரத மன்னரிடம் கூறியது, 62.15

ஹே! ஹனுமானே! உன்னைச் சரணடைபவர்கள் எல்லா இன்பங்களையும் பெறுகிறார்கள். நீங்கள் பாதுகாவலனாக இருக்கும்போது, நான்  எதற்காகப் பயப்பட வேண்டும்.
-ஹனுமன் சாலீசா, 22

சோம்பல், காலதாமதம் செய்தல் என்ற குணம், மறதி, தூக்கம் ஆகிய இந்த நான்கு குணங்களும், அழியும் இயல்புடையவர்கள் விரும்பி ஏறும் மரக்கலமாகும்.
-திருக்குறள் } 605

இலை, பூ, பழம், நீர் போன்றவற்றை யார் எனக்கு பக்தியுடன் அளிக்கிறானோ, தூய மனதை உடைய அவன் பக்தியுடன் அளிப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ஸ்ரீமத் பகவத்கீதை } 9.26

இந்தப் பொய்யான சம்சாரம் மாயையின் குணங்களால் ஆக்கப்பட்டது. இதில், "உடல் படைத்தவர்களில் சுகமுள்ளவன்' என்று ஒருவனும் இல்லை, முன்பு இருந்ததுமில்லை, இனி இருக்கப் போவதுமில்லை.     
-தேவி பாகவதம்

விளக்கைத் தூண்டுவதற்கு முன்பு இருள் இருக்கும். உள்ளத்தைத் தூண்டினால் மனஇருள் மறையும்.
-பத்ரகிரியார்

தட்சிணாமூர்த்தி குருவுக்கெல்லாம் குருவாக இருக்கிறார். அவர் ஆலமரத்தடியில் மெüனம் காத்து அமர்ந்திருக்கிறார், இளம் பிராயத்தினர். ஆனால் அவரது சீடர்கள் அனைவரும் முதியவர்கள்.

குரு மெளனமாக அமர்ந்திருந்து என்ன பாடம் நடத்துகிறார்? என்ன நடத்துகிறாரோ தெரியாது. ஆனால் சீடர்களுக்கு பாடமும் புரிந்து, சந்தேகங்களும் நிவர்த்தியாகிவிடுகின்றன.          
-தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்

எனக்கு சப்தமோ, அர்த்தமோ தெரியாது. அதுபோலவே பத்யமோ, கத்யமோ எனக்குத் தெரியாது.
எனக்குத் தெரிவதெல்லாம் என் ஹ்ருதயத்தில் தோன்றும் ஆறுமுகம் கொண்ட சித் ஸ்வரூபம் ஒன்றுதான். என்னுடைய வாயிலிருந்து, முருகனின் துதி உருவத்தில் உள்ள ஆச்சரியமான சொற்கள் அருவிபோலப் பெருக்கெடுத்து ஓடி வருகின்றனவே!

-ஸ்ரீசுப்ரமண்ய புஜங்கம், 2

தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT