வெள்ளிமணி

இந்த வார நிகழ்வுகள்...

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கூடலூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீகாமாட்சி அம்பிகை சமேத ஸ்ரீகைலாச நாதர் கோயில் கும்பாபிஷேகம் ஆக.27-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. 

DIN

கும்பாபிஷேகம்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கூடலூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீகாமாட்சி அம்பிகை சமேத ஸ்ரீகைலாச நாதர் கோயில் கும்பாபிஷேகம் ஆக.27-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. 
தொடர்புக்கு - 76676 66111.

சென்னை குரோம்பேட்டை பாரதிபுரம் அருள்மிகு ஸ்ரீபாரதி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் செப். 3}ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. 
தொடர்புக்கு - 94442 19496.

கோகுலாஷ்டமி மகோற்சவம்
கும்பகோணம் அருகே திருவிசலூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் ஸ்ரீகோகுலாஷ்டமி மகோற்சவம்  ஆக. 31-இல் தொடங்கி,  செப்.  6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடர்புக்கு - 89039 12616.

ஸ்ரீகுருவாயூரப்பன் தரிசனம்
சென்னை நங்கநல்லூர் ராம்நகர் எட்டாவது தெருவில் உள்ள ராம மந்திரம் கல்யாண மண்டபத்தில் பூரி 
ஸ்ரீஜெகன்னாத சுவாமி, 20 அடி உயர ஸ்ரீகுருவாயூரப்பன் அலங்காரத் தரிசனம்  ஆக. 25 முதல் 27-ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடத்தப்படுகிறது.  ஆக. 25}இல் வரலட்சுமி விரதத்தையொட்டி,  விளக்குப் பூஜை நடைபெறுகிறது.
தொடர்புக்கு - 73584 77073.

திருக்கல்யாணம்
சென்னை குரோம்பேட்டை நெமிலிச்சேரி கல்யாண சாஸ்தா சமாஜம் சார்பில், அஸ்தினாபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீவிநாயகா மினி ஹாலில் 17}ஆம் ஆண்டு சாஸ்தா திருக்கல்யாணம் ஆக. 27}ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.
தொடர்புக்கு - 94983 11899.

செட்டிநாடு பகுதிவாழ் பக்தர்கள் ஆசி பெறும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில்  ஸ்ரீதேவி,  பூதேவி வெங்கடாசலபதி திருக்கல்யாணம், பூலாங்குறிச்சி வி.எஸ்.சிவலிங்கம் செட்டியார் அரசு கலைக் கல்லூரியில் ஆக. 26-இல் மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. 

ஊஞ்சல் உற்சவம்
குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஸ்ரீதேவி மாசுபடா அம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் ஆக. 25-இல் நடைபெறுகிறது.  முக்கிய நிகழ்வுகள்: காலை 9} பால்குட ஊர்வலம்,  மாலை 6- அம்மன் பூங்கரகம், இரவு 7} பூந்தேர், பூப்பல்லக்கு, இரவு 8} ஊஞ்சல் உற்சவம்,  இரவு 9- தீமிதி விழா.

கும்பாபிஷேக பூர்த்தி விழா
சென்னை கொடுங்கையூர் அருள்மிகு ஸ்ரீபால் முனீஸ்வர சந்நிதி ஸ்ரீவசந்தி பால் முனீஸ்வர சேவை டிரஸ்ட் சார்பில்,  ஆறாம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழா செப். 3-ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, சிறப்பு ஹோமம், அபிஷேகம், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு -  96773 69933.

பவனி
மதுரை சோமசுந்தரேஸ்வரர் நரிகளைப் பரிகளாக்கிய திருவிளையாடல், தங்கக்குதிரையில் பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஆக. 26}ஆம் தேதி நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT