கார்த்திகை உற்சவம்
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கபுரம் எனும் கடிகாசல தலத்தில் ஸ்ரீ பாலராமாநுஜ....
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கபுரம் எனும் கடிகாசல தலத்தில் ஸ்ரீ பாலராமாநுஜ பால பக்த ஜன ஸபாவின் 66-ஆம் ஆண்டு கார்த்திகை 3ஆவது உற்சவம் சோளிங்கபுரம் சி.ஏ.எம்.மஹாலில் சனிக்கிழமை (டிச. 2) நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்: காலை 5.30- சுதர்சன ஹோமம்; 8 மணி - ஹரிநாம சங்கீர்த்தனத்துடன் பெரிய மலை, சிறிய மலையில் சுவாமிகளை சேவித்தல்; மாலை 5 } விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்; மாலை 5.30 } ஸ்ரீ ஷோடஸ மகாமந்திர பாராயணம்; மாலை 6 } சுமங்கலி பூஜை; மாலை 6.30}க்கு கன்யா பூஜை; இரவு 7}சுவாமி திவ்ய அலங்கார சேவை; 7.30}பரதநாட்டியம்; 8.30-திருவிளக்கு பூஜை; 10 மணி- பூ. ஸ்ரீநிவாச ராமாநுஜம் தலைமையில் ஸ்ரீ மகா ஹரிபந்த சேவை, ராமநாம சங்கீர்த்தனம்.
ஞாயிறு (டிச.3) காலை 5 மணி } பிருந்தாவன வஸந்த உற்சவமும், 6.30}க்கு பூர்ணாஹுதியும் நடைபெறும்.
தொடர்புக்கு: 93812 21119
Advertisement