தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (டிச.15 - டிச.21) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
தொழிலில் உண்டாகும் பிரச்னைகளை புத்திசாலித்தனமாகச் சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பொருளாதார நிலை சீராகவே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வெளியூர் தொடர்பு உண்டாகும். விவசாயிகள் புதிய
குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். அரசியல்வாதிகள் சாமர்த்தியமாய் பேசி சாதிப்பீர்கள். கலைத் துறையினருக்கு பண வரவு உண்டு. பெண்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குழந்தைப் பேறு கிடைக்கும். உடன்பிறந்தோர் உங்கள் நல்ல மனதை அறிவார்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைகளில் பங்கேற்பீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள்.
விவசாயிகள் கடினமாக உழைப்பீர்கள். அரசியல்வாதிகளின் புதிய திட்டங்களுக்கு ஆதரவு பெருகும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு வரவேற்பு கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களால் பாராட்டப்படுவார்கள்.
சந்திராஷ்டமம் - டிச.15.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். புதிய நட்புகள் உருவாகும். மதிப்பும் மரியாதையும் உயரும். தவறுகளைத் திருத்திக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கடன் பெற்று வாகனங்களை வாங்குவீர்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன உதவிகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் கட்சியில் மூத்தோரின் உதவிகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் புனித திருத்தலங்களுக்குச் செல்வீர்கள். மாணவர்கள் சக மாணவர்களின்
சந்தேகத்தை நிவர்த்தி செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - டிச. 16,17.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
குடும்பத்தில் அமைதி நிறையும். தோற்றத்தில் பொலிவும், நடையில் மிடுக்கும் உண்டாகும். பெற்றோரின் உடல்நிலை சீராகும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்
களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு உண்டு. வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள்.
விவசாயிகளின் எண்ணங்கள் ஈடேறும். அரசியல்வாதிகளுக்கு கடன் தொல்லை குறையும். கலைத் துறையினருக்கு பாராட்டுகள் கிடைக்கும். பெண்கள் ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - டிச. 18,19.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
உடல் ஆரோக்கியம் சிறக்கும். பிரிந்தவர்கள் குடும்பத்துடன் இணைவார்கள். இல்லத்துக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். தொழிலில் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வருமான உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை நிதானமாக நடத்துவீர்கள். விவசாயிகள் பயணங்களால் நன்மைகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். கலைத் துறையினர் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்கள் உறவினர்களின் மனத்தாங்கலை அகற்றுவீர்கள். மாணவர்கள் பேச்சில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம் - டிச. 20, 21.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
பெற்றோரின் மனம் கோணாமல் நடப்பீர்கள். உடனிருப்போர் ஆதரவாய் இருப்பார்கள். புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வெளிப்படையாகப் பேசமாட்டீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் முக்கிய விஷயங்களைப் பகிர வேண்டாம். விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களை ஆலோசித்து பெறுவீர்கள். பெண்களுக்கு வீட்டுத் தேவைகள் நிறைவேறும். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் வெற்றிக் கொடி நாட்டுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
தொழிலில் இடையூறுகளை முறியடிப்பீர்கள். பகைவர்கள் நட்பாய் மாறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாகவே தொடரும். பங்கு வர்த்தகத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சிறிது அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த பணம் கைவந்து சேரும். விவசாயிகளுக்கு நற்பெயர் ஏற்படும். அரசியல்வாதிகளுக்குப் பணிச்சுமை கூடும். கலைத் துறையினர் பிறருக்கு உதவுவீர்கள். பெண்கள் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களை எடுப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
குடும்பத்தில் கருத்து வேறுபாடு இருக்காது. நன்றாக உழைப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளைச் செய்வீர்கள். வயிற்று உபாதைகள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தர்கள் பிறருக்கு உதவி செய்வீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்த செலவு செய்வீர்கள். விவசாயிகள் உழைப்புக்கேற்ற பலனை அடைவீர்கள்.
அரசியல்வாதிகளின் கோரிக்கை மேலிடத்தால் நிராகரிக்கப்படும். கலைத் துறையினர் பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம். பெண்களுக்கு ஆன்மிக ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியர்களால் பாராட்டப்படுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
குடும்பத்தினரோடு பாசமாய் இருப்பீர்கள். உடனிருப்போருக்கு உதவுவீர்கள். அரசுப் பதவிகள் தேடி வரும். உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகக் கடமைகளைச் சரியாக ஆற்றுவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தைத் திறம்பட நடத்துவீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சமூகப் பிரச்னைகளில்
ஆர்வம் அதிகரிக்கும். கலைத் துறையினர் சீரான வருவாய் பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்தை ஆர்வத்துடன் நிர்வகிப்பீர்கள். மாணவர்கள் யோகா கற்றுக்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வருமானம் சீராகவே இருக்கும். கடன்களை வசூலிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கல் விஷயங்களில் தன்னிறைவைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத் துறையினர் ரசிகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
பெண்கள் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
தொழிலில் பிறருக்கு உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் திறமையும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றுவீர்கள்.
கலைத் துறையினர் ரசிகர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். பெண்கள் புனித திருத்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாணவர்கள் முன்கோபத்தை விடுத்து சகஜமாகப் பழகுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பெற்றோருக்கு மருத்துவச் செலவு செய்ய நேரிடும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்வீர்கள். அரசு உதவிகள் தேடி வரும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலக நிலையைப் புரிந்துகொள்வீர்கள்.
வியாபாரிகளுக்கு வருவாய் கூடும். விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு பயணங்களால் நன்மைகள் கூடும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.