வெள்ளிமணி

அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

தினமணி

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். அன்புடன் பழகுவீர்கள். சுபச் செய்திகள் கிடைக்கும்.  உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள்.

வியாபாரிகள் எதிலும் நேரடியான நேர்மையான உழைப்பை மூலதனமாக்குங்கள். விவசாயிகள் மகசூல் லாபம் அதிகரிக்க, போட்டிகளையும் உழைப்பையும் சந்திப்பீர்கள்.  அரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆணைப்படி நடக்கவும்.  

கலைத்துறையினருக்கு பண வரவு உண்டு. பெண்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளில் தவறாமல் ஈடுபடவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

பணிகள் திட்டமிட்டபடி முடிவடையும்.  தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன்பிறந்தோரின் ஆதரவு உண்டு. உடல் நலமும் மன வளமும் சீராக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பிறரிடம் நட்பாக இருப்பார்கள்.

வியாபாரிகள் ஆலோசித்து, புதிய முதலீடுகளில் ஈடுபடவும். விவசாயிகள் பிறரிடம் இன்முகத்துடன் பழகுவார்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்துச் செல்வார்கள். கலைத்துறையினர் ரசிகர்களுக்குச் செலவழிக்க நேரிடும்.

பெண்கள் குடும்பத்தில் மழலைப் பாக்கியம் உண்டாகக் காண்பார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - பிப்.17.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

கடினமாக உழைத்து பொருளீட்டுவார்கள். சேமிப்புகளை உயர்த்திக் கொள்வீர்கள். தர்ம சிந்தனைகள் கௌரவத்தையும் அந்தஸ்தையும் தேடி தரும்.

உத்தியோகஸ்தர்கள் பிறரை அரவணைத்துச் செல்வார்கள். வியாபாரிகள் மன உறுதியுடன் வருவாயைப் பெருக்குவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாகவே இருக்கும்.

அரசியல்வாதிகள் புதியவர்களை கட்சியில் சேர்ப்பார்கள். கலைத்துறையினருக்கு நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு குழப்பம் உண்டாகி மறையும். மாணவர்கள் சாதனைகளைப் படைப்பார்கள்.

சந்திராஷ்டமம் - பிப். 18,19.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவருவீர்கள். முக்கிய விஷயங்களில் பொறுப்புடன் செயல்படவும். சேமிப்புகளில் கவனம் செலுத்தவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதியம் அதிகரிக்கும். வியாபாரிகள் திட்டமிட்ட பணிகளை உடனுக்குடன் செயல்படுத்துங்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளையும் பாசன வசதிகளையும் பெருக்கிக் கொள்வார்கள்.

அரசியல்வாதிகளின் புகழ், செல்வாக்கு உயரும். பெண்கள் தங்கள் மனதை ஆன்மிகத்திலும் இறைவழிபாட்டிலும் செலுத்துவார்கள். மாணவர்கள் கடினமாக உழைப்பார்கள்.

சந்திராஷ்டமம் - பிப். 20,21.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் அமைதி நீடிக்கும். நல்ல செய்தி கிடைக்கும்.  பூர்விகச் சொத்துகளில் இருந்த பிரச்னைகளை புரிந்துகொள்வார்கள்.

உத்தியோகஸ்தர்கள் சிலர் வெளியூருக்கு மாற்றலாகிவிடுவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் - வாங்கல் சிறந்த பலனைக் கொடுக்கும். விவசாயிகளில் பால் வியாபாரம் செய்பவர்களுக்கு  நல்ல பயன் உண்டு.

அரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனத்துடன் பழகவும். கலைத்துறையினர் ரசிகர்களை கௌரவப்படுத்துவார்கள்.  பெண்கள் பிரச்னைகளில் விடுபடலாம். மாணவர்கள் பெற்றோரின் சொல்படி நடக்கவும்.

சந்திராஷ்டமம் - பிப். 22,23.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் தடைகளை வெற்றி கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான சிந்தனைகள் மேலோங்கும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவார்கள்.

வியாபாரிகளின் எண்ணங்கள் செயல்களில் பிரதிபலிக்கும். விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும்.  அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்க்கும் காரியங்களில் நல்ல பலன் கிடைக்கும்.

கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த அங்கீகாரமும் மதிப்பும் பெறுவீர்கள். பெண்களுக்கு உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை சிதறடிக்க வேண்டாம்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட செயல்களில் வெற்றி பெறுவீர்கள்.  பொருளாதார நெருக்கடி குறையும். குழந்தைகள் மகிழ்ச்சியான மாற்றங்களைக் காண்பார்கள். உடல் உபாதைகள் நீங்கும்.  உத்தியோகஸ்தர்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கும்.

வியாபாரிகள் மன உறுதியுடன் செயல்பட்டு வருவாயை பெருக்குவார்கள். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்குவார்கள்.

அரசியல்வாதிகள் புதியவர்களை கட்சியில் சேர்ப்பார்கள். கலைத்துறையினரின் புகழ் உயரும். பெண்கள் இறைவழிபாட்டில் மனதைச் செலுத்துவார்கள்.  மாணவர்கள் படித்து சாதனைகளைப் படைப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

புத்தி சாதுர்யமும் தன்னம்பிக்கையும் கூடும். கடினமாக உழைத்து பொருளீட்டுவீர்கள்.  உறவினர்கள், நண்பர்கள் இல்லம் தேடி வருவார்கள். குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை கிடைக்கும். வியாபாரிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு உண்டு.

விவசாயிகள் புதிய குத்தைகளைப் பெறுவார்கள்.  அரசியல்வாதிகள் மக்கள் நலப் பணிகளில் இறங்குவார்கள். கலைத்துறையினருக்கு பண வரவு உண்டு.

பெண்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். மாணவர்கள் பிறர் மத்தியில் பெருமையடைவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். எதிராகச் செயல்பட்டவர்கள் விலகுவார்கள். பொருளாதார வளம் மேம்படும். செல்வாக்கும்  சொல்வாக்கும் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மதிக்கப்படுவீர்கள்.  வியாபாரிகள் வளர்ச்சியைக் காண்பார்கள். விவசாயிகள் கொள்முதலில் லாபத்தைக் காண்பார்கள். அரசியல்வாதிகள் நன்கு உழைப்பார்கள்.

கலைத்துறையினர் பிறர் ஆதரவைப் பெறுவார்கள். பெண்களுக்கு நற்செய்திகள் கிடைக்கும். மாணவர்களின் கோரிக்கைகளை பெற்றோர் நிறைவேற்றுவார்கள்.

சந்திராஷ்டம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தொழில் போட்டிகளில் சிந்தித்து முடிவெடுப்பீர்கள். மனதில் தெளிவு பிறக்கும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் பழைய கடன்களை வசூலிப்பார்கள். விவசாயிகள் சந்தையில் விளைபொருள்களை லாபமாக விற்பார்கள்.

அரசியல்வாதிகளுக்கு கௌரவமும் அந்தஸ்தும் உயரும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் பெற்றோர் வழியில் பெருமை காண்பார்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளைத் தவறாது செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தேவையில்லாத சிந்தனைகளை ஒதுக்கி விடுவீர்கள். கவனத்துடன் வாக்கு கொடுப்பீர்கள். எதிர்ப்புகள் இருக்காது. பெரியோர்களைச் சந்தித்து ஆதரவைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சிந்தனைகள் மேம்படும். வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்வார்கள். விவசாயிகள் இழுபறியான செயல்களைச் செய்து முடிப்பார்கள்.

அரசியல்வாதிகளுக்கு பயண வாய்ப்புகள் கைகூடும்.  கலைத்துறையினருக்கு பிறரின் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மருத்துவச்  செலவுகள் குறையும்.  எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு கடன்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு சாதகமான சூழல் நிலவும். விவசாயிகள் கால்நடைகளால் நல்ல பலன்களைக் காண்பார்கள்.

அரசியல்வாதிகள் மனதில் தோன்றும் எண்ணங்களைச் செயல்படுத்துவார்கள்.  

கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

SCROLL FOR NEXT