வெள்ளிமணி

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

திருமண பாக்கியம் அருளும் குத்தாலம்..

இணையதளச் செய்திப் பிரிவு

சோ​ழ​நாட்டு காவி​ரி​யின் இரு​ம​ருங்​கி​லும் சைவ, வைணவ பேத​மின்றி ஒன்​றோ​டொன்று புரா​ணத் தொடர்பு பெற்ற சிறப்​பு​மிகு தலங்​கள் அதி​கம். அவற்​றுள் ஒன்​று​தான் "திருத்​து​ருத்தி' எனப்​ப​டும் குத்​தா​லம். சிறப்​பு​மிக்க ஐந்து பெரு சிவா​ல​யங்​க​ளு​டன் திரு​மால் விண்​ண​க​ரம் ஒன்​றும் இணைந்த சிறப்​பு​டைய ஊர் இது.

காவிரி நதி​யின் இரு கிளை​க​ளுக்கு இடை​யில் தாமா​கவே உரு​வான மணல்​திட்​டு​க​ளைத் தமி​ழில் "துருத்தி' என்று குறிப்​பி​டு​வர். தேவா​ரப் பாடல்​க​ளில் "திருத்​து​ருத்தி' என்று குறிப்​பி​டப்​பட்​டுள்ள இத்​த​லம், புராண காலத்​தில் உத்​தால மரங்​கள் நிறைந்து காணப்​பெற்​ற​மை​யால் "உத்​தா​லம்' என்று வழங்​கப்​பட்​டது. இதுவே பின்​னா​ளில் "குத்​தா​லம்' என்று திரிந்​தது.

சிவ சாப நிவர்த்​திக்​காக பசு​வுரு கொண்டு திரிந்த கோரூ​பாம்​பிகை, வரி​சை​யாக சிவ பூஜை செய்​திட்ட காவி​ரிக்​

க​ரைத் தலங்​கள் இப்​ப​கு​தி​யில் பல. இவற்​றுள் தேர​ழுந்​தூர், அசிக்​காடு, மாந்தை, கோமல், ஆனாங்​கூர், திருக்​கோ​ழம்​பம், கரை​கண்​டம், திரு​வா​வ​டு​துறை எனப் புரா​ணத்​தொ​டர்​பு​டைய பதி​னான்கு தலங்​கள் முக்​கி​ய​மா​னவை. இத்​த​லங்​கள்​தோ​றும் கோசஹ பெரு​மா​ளா​கப் பசு​மேய்ப்​பர் வடி​வந்​தாங்கி, அம்​பி​கைக்​குக் காவ​லாக திரு​மால் காத்து நின்​றி​ருக்​கின்​றார் என்​கி​றது புராண வர​லாறு.

இப்​பு​ரா​ணக் கதை​யு​டன் தொடர்​பு​டைய திரு​வேள்​விக்​குடி, எதிர்​கொள்​பாடி, திரு​மங்​க​லம், திரு​ம​ணஞ்​சேரி முத​லான திரு​ம​ணத்​த​லங்​க​ளில் முதன்​மை​யா​னது குத்​தா​லம்.

திரு​வா​வ​டு​து​றை​யில் பசு​வுரு நீங்​கப்​பெற்ற அம்​பி​கை​யா​ன​வள், பர​த​முனி செய்​திட்ட வேள்​வி​யின் பய​னாக, அவ​ருக்​குப் பெண்​ம​க​வாக அவ​த​ரித்த தலம்​தான் இந்த குத்​தா​லம். தக்க சம​யத்​தில் திருக்​கு​றிப்​பால் இவற்றை உணர்த்​திய சிவன் "சொன்​ன​வாறு அறி​வார்' என்​கிற திரு​நா​மத்​து​டன் அம்​பி​கை​யைத் திரு​ம​ணம் புரிந்து ஆட்கொண்டு அரு​ளி​ய​தும் இத்​த​லத்​தில்​தான்.

அம்​மை​யப்​ப​ரின் இந்​தப் புனி​த​மான திரு​மண வைப​வத்தை மூவு​ல​கத்​தி​ன​ரும் அதி​ச​யிக்​கும்​படி நிகழ்த்​திக் காட்டிட திரு​வு​ளம் கொண்ட திரு​மா​லும் ஸ்ரீ ஆ​தி​கே​ச​வப் பெரு​மா​ளாக இத்​த​லத்​தி​லேயே அவ​தா​னித்​த​து​தான் சிறப்பு. இவர் திருமண பாக்கியம் அருளிடும் வரப்பிரசாதி.

சிறப்​பு​டைய அம்​மை​யப்​பர் திரு​ம​ணத்தை நடத்​திக்​காட்​டிய மகிழ்​வு​டன், தாமும் செங்​க​ம​லத்​தா​யா​ரு​டன் மங்​க​ள​வி​வா​ஹம் ஏற்று மகிழ்ந்​தா​ராம் ஸ்ரீ ஆ​தி​கே​ச​வப் பெரு​மாள். உல​கத்து மாந்​த​ரின் திரு​மண வைப​வத்​துக்​கான சம்​பி​ர​தா​யங்​கள் இன்​னின்​னவை என உல​கத்​த​வ​ருக்கு உணர்த்​தி​டும்​ப​டி​யாக முதன்​மு​த​லில் 42 வகை​யான புனி​தச்​ச​டங்​கு​க​ளு​டன் தெய்​வத் திரு​ம​ணம் நிகழ்த்​தப்​பெற்ற பெரும்​புண்​ணி​யத்​த​ல​மும் இது.

அமை​தி​யான சூழ​லில் அதீ​த​பொ​லி​வு​டன் இரண்டு திருச்​சுற்​று​க​ளு​டன் திகழ்​கி​றது இவ்​வா​ல​யம். பூதேவி, நீளா​தேவி சமே​த​ர​ராக மூலஸ்​தா​னத்​தில் மிகக் கம்​பீ​ரத்​து​டன் பெரிய திரு​வி​ன​ராய் நின்ற கோலத்​தில் எழுந்​த​ரு​ளி​யி​ருக்​கின்​றார்

ஸ்ரீ ஆ​தி​கே​ச​வப்​பெ​ரு​மாள். அவ​ருக்கு முன்னே உள்ள தொன்​மை​யான உற்​ச​வத் திரு​மே​னி​க​ளும் வெகு அழ​கா​னவை. அர்த்​த​மண்​ட​பத்​தில் ஆழ்​வா​ரா​தி​கள் இடம் பெற்​றுள்​ள​னர். சுவ​ரின் இரு​ம​ருங்​கி​லும் தசா​வ​தார ஓவி​யங்​கள் இடம் பெற்று இருப்​பது கூடு​தல் அழகு. மூல​வ​ருக்கு வலது பாகத்​தில் தனித்த சந்​நி​தி​யில் பூரண செüந்​தர்​யத்​து​டன் தாயார் எழுந்​த​ருளி இருக்​கின்​றாள். அம்​பி​கை​யு​டன் தானும் பசு​ரூ​பம் தாங்கி உடன் வந்த திரு​ம​கள் தாம​ரை​ம​லர்க்​

கு​ம​ரி​யாக இங்கே தோன்​றி​ரு​ளி​ய​தாக ஐதீ​கம். இத​னா​லேயே இத்​தா​யா​ருக்கு பங்​க​ஜ​வல்லி, செங்​

க​ம​ல​நாச்​சி​யார் என்​ப​தெல்​லாம் திரு​நா​மம்.

சதா அலங்​கா​ர​ரூ​ப​ராக வெள்​ளிக்​க​வ​சத்​து​டன் காட்சி தரு​கி​றார் பால அனு​மார். "வேண்​டி​யது அரு​ளும் வரப்​பி​ர​சாதி இந்த ஆஞ்​ச​னே​யர்' என்று சொல்​கி​றார்​கள். தொடர்ந்த வேத​மந்​தி​ர​ஜ​பங்​க​ளின் வலு​வால் செறிந்து, சாநித்​யத்​து​டன் ஸ்ரீ சக்​க​ரத்​தாழ்​வார் சந்​நிதி நிறைந்​துள்​ள​தும் குறிப்​பி​டத்​தக்​கது.

சிவ​னுக்​கு மிக உயர்ந்​த​தா​கிய மகா​வில்​வம் இவ்​வா​ல​யத்​துக்கு உரிய புனித விருட்​ச​மாக வழி​ப​டப்​ப​டு​வது சிறப்பு .

​சு​ஜாதா மாலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நரவணே புத்தகத்தை வெளியிட்டது யார்? காவல் துறை வழக்கு!

மறியலில் ஈடுபட திரண்ட சிபிஎம் கட்சியினா்

முதல்வரின் பிறந்தநாளையொட்டி மாநில வில்வித்தைப் போட்டி

டி20 உலகக் கோப்பை: மார்க்ரம் அரைசதம் விளாசல்; கனடாவுக்கு 214 ரன்கள் இலக்கு!

வேளாங்கண்ணி கடலில் மூழ்கி இளைஞா் பலி

SCROLL FOR NEXT