வெள்ளிமணி

ஸ்ரீ ஆதிசங்கரர் முதல் ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திரர் வரை...

பெருமை வாய்ந்த காமகோடி பீடத்தின் புதிய தலைமுறை

DIN

"ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர....' என்று பக்தர்களின் கோஷத்துக்கு இடையில், விஸ்வாவசு வைசாக சுக்ல திரிதியையில், காலை 6.15 மணியளவில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் உத்தரதிகாரியாகவும் இளைய பீடாதிபதியாகவும் தாம் தேர்ந்தெடுத்த தம்முடைய பிரதம சீடருக்குத் துவராடையும் சந்நியாச தீûக்ஷயும் கொடுத்து, சிஷ்ய ஸ்வீகரணம் செய்துகொண்டார் ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் பரம்பராகத மூலாம்னாய சர்வக்ஞ பீடமான

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70ஆவது பீடாதிபதி பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

சந்நியாச தீûக்ஷ , சிஷ்ய ஸ்வீகரணத்தின் பிற சடங்குகளை நிறைவேற்றி, இளைய பீடாதிபதியை முறையாக அறிமுகப்படுத்திய தருணத்தில், சில கணங்கள் கண்களை மூடித் தியானித்த ஸ்ரீ விஜயேந்திரர், ""இளைய பீடாதிபதியின் பீடாரோஹண தீக்ஷôத் திருநாமம் ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பதாக அமையும்'' என்றும் அறிவித்தார்.

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக பக்தர்கள் கையெடுத்து வணங்கிய அந்த நேரத்தில், ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில் திருக்குளத்தின் படித்துறையில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில், பீடாதிபதியும் இளைய பீடாதிபதியும் அருகருகே அமர்ந்திருக்க தரிசித்தவர்களின் மனக்கண்களில், 68}ஆவது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளும் 69}ஆவது பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் இணைந்து காட்சி தந்தார்கள். நான்கு பெரியவர்களையும் ஒருசேர தரிசித்த பாங்கில், பலருடைய கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடமானது, பழம் பெருமை வாய்ந்தது; தாமே நிர்மாணித்து, நேரடியாக தாமே முதல் குருவாகத் திகழ்ந்து ஆதிசங்கர பகவத் பாதர் அருளாட்சி செய்த பீடம். அப்போது தொடங்கி இப்போது வரை, ஆசார்ய பெருமக்களின் அருளாட்சியும் அன்பும் கருணையும், கங்கைப் பிரவாகமாக, தடையில்லாப் பேரருவியாகப் பாய்ந்து கொண்டிருக்கும் புனிதத் தலம்.

நகரேஷு காஞ்சியில், ஆதிசங்கர பகவத் பாதர் சர்வக்ஞ பீடமேறினார் என்பதை சதாசிவ பிரம்மேந்திரரின் "குரு ரத்ன மாலா' என்னும் ஸ்தோத்திரம் தெளிவாக உரைக்கிறது.

உபயாத்ஸு புதேஷு ஸர் வ திக்ப்ய:

ப்ரதிசன் ஆசு பராபவம் ய ஏப்ய:

வித் ருதாகில வித்பதஸ் ச காஞ்ச்யா(ம்)

அத்ருதார்த்தி: ஸ திசேச் ச்ரியம் ச காஞ்சித்

"வித்ருதாகில வித்பத ஆருட சர்வக்ஞ பீடம்' என்னும் விளக்கங்கள், பொது ஊழிக்கு முன்பான 482}ஆம் ஆண்டு வாக்கில், காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காமகோடி பீடத்தை நிர்மாணித்த ஆதிசங்கரர், தாமே இந்தப் பீடத்தின் முதல் ஆசார்யராக (குருவாக) அமர்ந்து அருள்பாலித்தார் என்பதைக் காட்டுகின்றன. பொ.ஊ.மு. 509}இல் அவதரித்த ஆதிசங்கரர், 32 ஆண்டுகள் பூமியில் சஞ்சரித்து, பொ.ஊ.மு. 477-இல் மஹாசித்தி அடைந்தார்.

ஆதிசங்கரரை அடுத்து ஸ்ரீ சுரேச்வராசார்யர், ஸ்ரீ சர்வக்ஞாத்மேந்திர சரஸ்வதி, ஸ்ரீ சத்யபோதேந்திர சரஸ்வதி என்று தொடர்ந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஞான பரம்பரை, எந்தவித இடையூறும் இல்லாமல், இப்போது வரை தொடர்கிறது. பொ.ஊ.மு. 482-இல் தொடங்கி, இன்றுவரை (2025), எந்தெந்த ஆசார்யர் எவ்வெவ்வாண்டுகளில் அருளாட்சி நடத்தினார்கள் என்னும் விவரங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த ஊர்களில் அவதரித்தார்கள், என்னென்ன செய்தார்கள் என்பன பற்றிய குறிப்புகள் காஞ்சி ஸ்ரீ மடத்துப் பதிவுகளிலும், வேறு பல கல்வெட்டு-செப்பேட்டு}நூல்களின் தகவல்களிலும் உள்ளன. இந்த வரிசையில், 71-ஆவது பீடாதிபதியாகப் பட்டமேற்றிருக்கிறார் ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

"ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி' என்னும் திருநாமம் கொண்டு இந்தப் பீடத்தை அலங்கரித்தவர்கள் பலர். பொது ஊ.மு. 172 முதல் 235 வரை அருளாட்சி செய்த 12}ஆவது பீடாதிபதியின் தீக்ஷô நாமம், ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பதாகும். தொடர்ந்து, 437 முதல் 447 வரை அருளாட்சி செய்த 21}ஆவது பீடாதிபதி } சார்வ பெüமர் என்றும் அறியப் பெற்றவர்; இவரையே "முதலாம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்' என்பது வழக்கம்.

692 முதல் 710 வரை அருளாட்சி செய்த 34-ஆவது பீடாதிபதி இரண்டாம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

1098 முதல் 1166 வரை அருளாட்சி செய்த 47ஆவது பீடாதிபதி } ஸ்ரீ சந்திர சூடர் என்றும் அறியப் பெற்றவர்; மூன்றாம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

1746 முதல் 1783 வரை அருளாட்சி செய்த 62ஆவது பீடாதிபதி 1758-ஆம் ஆண்டு புரட்டாசியில், திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி அன்னைக்கு, ஆதிசங்கரர் வழியில் தாடங்கப் பிரதிஷ்டை செய்தவர் நான்காம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

1813 முதல் 1850 வரை அருளாட்சி செய்த 64-ஆவது பீடாதிபதி 1840-இல் காஞ்சி காமாட்சியம்மன் திருக்கோயில் ஜீர்ணோத்தாரணமும் கும்பாபிஷேகமும், 1848-இல் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்கப் பிரதிஷ்டையும் செய்தவர்; மெக்கன்சி குறிப்புகளில் போற்றப் பெற்றவர்; தஞ்சையின் இரண்டாம் சரபோஜி மன்னராலும் அவருடைய வம்சாவளியினராலும் வணங்கப்பெற்றவர்; ஐந்தாம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

1891 முதல் 1907 வரை அருளாட்சி செய்த 66}ஆவது பீடாதிபதி திருவாங்கூர் மன்னரால் பெரிதும் போற்றப் பெற்றவர்; ஆறாம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

1907 முதல் 1994 வரை அருளாட்சி செய்த 68-ஆவது பீடாதிபதி "பெரிய பெரியவா' என்றும், "மஹா பெரியவர்' என்றும் அழைக்கப் பெற்றவர்; ஏழாம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் இத்திருநாமத்தில் அருள் பாலித்தவர்கள்.

ஸ்ரீ மடத்தின் மரபுக்குப் பெருமை கூட்டுபவராக 71-ஆவது பீடாதிபதி, "ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி' என்னும் திருநாமம் ஏற்கிறார்கள்.

முன்னரே குறிப்பிட்டபடி, ஆதிசங்கர பகவத்பாதர், பல திசை அறிஞர்களையும் வாதில் வென்று சர்வக்ஞ பீடம் ஏறினார்; மேலும் வாணிதேவியை வென்றதால், "சரஸ்வதி' என்னும் யோகபட்டம் கிடைக்கப் பெற்றார். கைலாச சங்கரரின் அவதாரமாகவே பூமியில் சஞ்சரித்த ஆதிசங்கரரை வணங்கி, பேரொளிப் பிரகாச ஞானத்தைக் குறிக்கும் வகையில், "இந்திர' பட்டத்தை தேவேந்திரன் வழங்கிச் சென்றான். இரண்டும் இணைந்து, காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் யாவரும், "இந்திரசரஸ்வதி' என்றே அழைக்கப்பெறுகின்றனர்.

இளைய பீடாதிபதியை சிஷ்ய ஸ்வீகரணம் செய்யும் வேளையில், கருணையால் நெகிழ்ந்து சில வாக்கியங்களை உரைத்தார் ஸ்ரீ சங்கரவிஜயேந்திர சுவாமிகள். ரிக் வேத கில சூக்த மந்திரங்களில் ஒன்றான "மம வ்ரதே தே ஹ்ருதயம் ததாமி, மம சித்தம் அனுசித்தம் தே அஸ்து' என்னும் மந்திரத்தின் வரிகளை உரைக்கும்போது கருணையோடு நாத் தழுதழுக்க அவர் உரைத்தார்; சுற்றியிருந்தவர்கள் அனைவரும் உள்ளம் உருகினார்கள்.

இந்த வரிகளுக்கான பொருள், பலவிதமாகக் கூறப்படும். கிருஹ்ய சூத்திரங்களிலும் உபநயனத்திலும், இவ்வரிகள் உபதேசிக்கப்படும்போது, "இதயபூர்வமாக நம்முடைய சத்தியங்களும் விரதங்களும் அனுசரிக்கப்படட்டும்' என்னும் விளக்கம் பெறும். இதுவே, சந்நியாச தர்மம் ஏற்கிற சீடரிடம் உபதேசிக்கப்பெறும் போது, "நான் (நம்முடைய பரம்பரை) மேற்கொண்டுள்ள விரதத்தில் உன்னுடைய உள்ளத்தையும் நிலைநிறுத்துகிறேன்' என்னும் விளக்கம் கிட்டும்.

திருமணம் முடிந்து அயோத்தி திரும்பிக் கொண்டிருந்த இராமரை, பரசுராமர் சந்தித்த வரலாறு நமக்கெல்லாம் தெரியும். விஷ்ணு தனுசை நாணேற்றும்படியாக பரசுராமர் கூறியதை ஏற்ற இராமர், ""நாணேற்றிவிட்டு, அம்புக்கு இலக்கென்ன?'' என்று வினவினார். "தம்மிடமிருந்த இரண்டில் எதை இலக்காக்குவது' என்று சிந்தித்த பரசுராமர், இப்படிச் சொன்னாராம்: ""என்னிடம் இருக்கும் லோக சஞ்சார வல்லமையை (பூமியில் எங்கு வேண்டுமானாலும் நினைத்த மாத்திரத்தில் செல்லக் கூடிய திறன்) விட்டுக் கொடுக்க மாட்டேன். அப்போதுதான் புண்ணிய தீர்த்தங்களுக்குச் செல்ல முடியும். ஆனால், என்னிடமுள்ள தபோ வலிமையை இலக்காக்குகிறேன்.''

என்ன வேடிக்கை! ஆண்டாண்டுகால தபோ வலிமை இருந்தால், லோக சஞ்சார வல்லமையை எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம். லோக சஞ்சாரத்தை வைத்துத் தபோ வலிமையைப் பெற முடியாது. ஆனாலும், தம்முடைய தபோ வலிமையை அம்பின் நுனியில் பரசுராமர் வைக்க, அம்பு வழியாகவே இராமரை அடைந்தது அவ்வல்லமை! தம்முடைய ஆன்ம ஆற்றலை அப்படியே கொடுத்தார். பரசுராமர் முந்தைய தலைமுறை என்றால், இராமர் அடுத்த தலைமுறை; ஆமாம், இருவரும் ஒரே திருமால்தாம்!

முந்தைய தலைமுறை, அடுத்த தலைமுறைக்குத் தன்னையே தந்து வளர்த்துகிறது. "மம வ்ரதே தே ஹ்ருதயம் ததாமி' என்னும் பெருவாக்கியத்தையும், "என் தவத்தை அளித்து உன்னில் காண்கிறேன்' என்பதாக விளங்கிக் கொள்வதில் தவறில்லை. ஸ்ரீ ஆதிசங்கரர் தொடங்கி, ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திரர் வரை ஒரே சங்கராசார்யர்தாம்!

இடைவிடாத இந்த குரு பாரம்பரியத்தின் சீடர்களாக இருப்பதற்கும், ஆசார்ய பெருமக்களை வணங்கி, அவர்கள் காட்டும் வழியில் பயணிப்பதற்கும் நாம் கொடுத்து வைத்திருக்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT