இந்தியப் பயணம் பயனுள்ளதாக இருக்கும்: மலேசியப் பிரதமர்
புத்திரஜெயா, ஜன.11: இந்தியாவில் மேற்கொள்ளவிருக்கும் தனது பயணம் சம்பிரதயமாக முடிந்துவிடாமல் பயனுள்ளதாக்கும் வகையில் அமையும் என மலேசியப் பிரதமர் நஜீத் ரசாக் நம்பிக்கை தெரிவித்தார். தில்லி மற்றும் சென்னை
புத்திரஜெயா, ஜன.11: இந்தியாவில் மேற்கொள்ளவிருக்கும் தனது பயணம் சம்பிரதயமாக முடிந்துவிடாமல் பயனுள்ளதாக்கும் வகையில் அமையும் என மலேசியப் பிரதமர் நஜீத் ரசாக் நம்பிக்கை தெரிவித்தார்.
தில்லி மற்றும் சென்னைக்கு ஜனவரி 19-முதல் 23-ம் தேதி வரை, தான் மேற்கொள்ளவிருக்கும் பயணம் குறித்து புத்திரஜெயாவில் உள்ள தனது அலுவலகத்தில் இந்திய பத்திரிகையாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது:
இந்தியப் பயணத்தின்போது நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து துறைச் சார்ந்த ஒப்பந்தங்கள் செய்யப்படும் என நம்புகிறேன்.
மலேசியாவில் உள்ள தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களைக் கொண்டு செயல்படும் தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தொழில்நுட்பங்கள், கனரக தொழில் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இந்தியா முதலீடு செய்ய வாய்ப்புகள் உள்ளன.
பாமாயில்...இந்தியாவுக்கு தொடர்ந்து தடையில்லாமல் பாமாயிலை வழங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என நம்பப்படுகிறது என்றார் நஜீத் ரசாக்.