முகப்பு
உலகம்

மெல்போர்னில் இனவெறியர்கள் உள்ளனர்: ஆஸ்திரேலிய போலீஸ் உயர் அதிகாரி

மெல்போர்ன்,ஜன.16:  மெல்போர்ன் நகரில் இனவெறியும், இனவெறியர்களும் இல்லை என்று சொல்ல முடியாது என்றார் அந்நாட்டு விக்டோரியன் நகர் போலீஸ் துணைக் கமிஷனர் கேன் ஜோன்ஸ்.  அதேசமயம் மெல்போர்ன் நகர் முழுவதும் இனவ

Updated On : 27 டிசம்பர், 2023 at 2:24 PM
பகிர்:

மெல்போர்ன்,ஜன.16:  மெல்போர்ன் நகரில் இனவெறியும், இனவெறியர்களும் இல்லை என்று சொல்ல முடியாது என்றார் அந்நாட்டு விக்டோரியன் நகர் போலீஸ் துணைக் கமிஷனர் கேன் ஜோன்ஸ்.

 அதேசமயம் மெல்போர்ன் நகர் முழுவதும் இனவெறி பரவியுள்ளதாகவும், இனவெறியர்கள் உள்ளதாகவும் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல் இனவெறி நோக்கமுடையது என்று புகார் எழுந்துள்ளது. ஆனால் இதை அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது.

 இந்நிலையில் அந்நாட்டு போலீஸ் உயர் அதிகாரி ஒருவரே மெல்போர்னில் இனவெறியர்கள் உள்ளனர் என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

 மெல்போர்ன் நகரில் சாலைகளில் வன்முறை செயல் அதிகரித்துள்ளது. இதில் இந்தியர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுப்பதற்கு ஆஸ்திரேலிய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

 இதுபோன்ற சாலையோர வன்முறை செயலை தடுத்து நிறுத்த முயலும் அதேவேளையில் நகரில் இனவெறியர்களின் செயல் குறித்தும் விரிவாக ஆலோசித்து அவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தை தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக்கொள்வது அவசியமாகிறது.

 மெல்போர்னில் இந்தியர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல் அனைத்துமே அவர்கள் செய்யும் வேலை, நேரம், பயண நேரம் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

 அதற்காக இந்தியர்கள் தேர்வு செய்யும் வேலை குறித்தோ, அவர்களது பயண நேரம் குறித்தோ விமர்சிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.