காத்மாண்டு-லக்னெü விமான சேவை தொடக்கம்
காத்மாண்டு, ஜன.8: நேபாளத்தைச் சேர்ந்த விமான நிறுவனம் காத்மாண்டு-லக்னெü இடையே விமான சேவையைத் தொடங்கியுள்ளது. வாரத்துக்கு மூன்று முறை இந்த விமானங்கள் இயக்கப்படும். நேபாளத்தின் புத்தா ஏர் எனும் நிறுவனம்
உலகம்காத்மாண்டு-லக்னெü விமான சேவை தொடக்கம்
காத்மாண்டு, ஜன.8: நேபாளத்தைச் சேர்ந்த விமான நிறுவனம் காத்மாண்டு-லக்னெü இடையே விமான சேவையைத் தொடங்கியுள்ளது. வாரத்துக்கு மூன்று முறை இந்த விமானங்கள் இயக்கப்படும். நேபாளத்தின் புத்தா ஏர் எனும் நிறுவனம்
காத்மாண்டு, ஜன.8: நேபாளத்தைச் சேர்ந்த விமான நிறுவனம் காத்மாண்டு-லக்னெü இடையே விமான சேவையைத் தொடங்கியுள்ளது. வாரத்துக்கு மூன்று முறை இந்த விமானங்கள் இயக்கப்படும்.
நேபாளத்தின் புத்தா ஏர் எனும் நிறுவனம் 47 பேர் பயணம் செய்யக்கூடிய ஏடிஆர்-42 ரக விமானங்களை இந்த பகுதியில் இயக்குகிறது. புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விமானம் இயக்கப்படும்.
லக்னெüவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து விமான இணைப்பு இருப்பதால் நேபாளத்திலிருந்தும், இந்தியாவிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருவதற்கு வசதியாக இந்த விமானம் இருக்கும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வீரேந்திர பகதூர் தெரிவித்தார்.
ஏற்கெனவே புத்தா ஏர் நிறுவனம் காத்மாண்டுவிலிருந்து பூடானுக்கு விமானங்களை இயக்குகிறது. இந்நிறுவனம் தொடங்கியுள்ள இரண்டாவது சர்வதேச விமான சேவை இதுவாகும்.
அறிமுக கட்டணமாக ரூ. 5,600 ஆக குறைந்த பிரிவினருக்கான கட்டணமும் ரூ. 10,400 ஆக உயர் பிரிவு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா, பாட்னா, வாராணசி ஆகிய நகரங்களிடையே விமானங்களை இயக்கவும் இந்நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. கொல்கத்தா இடையிலான விமான சேவை மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக வீரேந்திர பகதூர் தெரிவித்தார்.