உலகம்

பாகிஸ்தானில் ஆஞ்சநேயர் கோவில் புதுப்பிப்பு

இஸ்லாமாபாத்,பிப்.20: பாகிஸ்தானில் உள்ள 1500 ஆண்டு பழமையான ஆஞ்சநேயர் கோவில், புதுப்பிக்கப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது.  பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் உள்ள கராச்சியில் அமைந்துள்ளது ஸ்ரீ பஞ்சமுகி ஆஞ்சந

தினமணி

இஸ்லாமாபாத்,பிப்.20: பாகிஸ்தானில் உள்ள 1500 ஆண்டு பழமையான ஆஞ்சநேயர் கோவில், புதுப்பிக்கப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது.

 பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் உள்ள கராச்சியில் அமைந்துள்ளது ஸ்ரீ பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோவில். இக்கோவிலில் உள்ள ஆஞ்நேயர் சிலை உலகப் புகழ் பெற்றது. நீலம் மற்றும் வெள்ளை நிறத்தால் ஆன இந்தச் சிலை இயற்கையிலே உருவானதாகக் கருதப்படுகிறது.

 இது குறித்து கோவில் பொறுப்பாளர் மகராஜ் கூறியது:

 நீண்ட போராட்டத்துக்குப் பின் இக்கோவிலில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் சட்டப்படி வெளியேற்றப்பட்டனர். கோவில் நிலத்தின் உரிமையை சட்டப்படி மீட்டுப் பெறுவோம்.

 இக்கோவிலை முழுமையாகப் புதுப்பிக்க ரூ. 45 லட்சம் தேவைப்படுகிறது.

 அதற்குத் தேவையான நிதி திரட்டப்பட்டு வருகிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக விரைவிலேயே இக்கோவில் புதுப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT