உலகம்

பப்புவா நியூகினியா, பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியா மற்றும் பாகிஸ்தானில் புதன்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தினமணி

பப்புவா நியூ கினியா மற்றும் பாகிஸ்தானில் புதன்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் இது 6.4 அலகுகளாக பதிவானது. எனினும், இதனால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இந்த நிலநடுக்கம் பப்புவா நியூ கினியாவின் கிழக்கில் உள்ள ரபெüல் நகரின் வடக்கே 31 கி.மீ. தொலைவில் புதன்கிழமை காலை 9.14 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

பூமிக்கடியில் 18 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கம் காரணமாக உயிருக்கோ, உடமைக்கோ சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவானது.

இஸ்லாமாபாத், பெஷாவர், ராவல்பிண்டி, லாகூர் மற்றும் தென்மேற்கு ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. ஆனால் பாதிப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பால் இந்தியாவின் வட மாநிலங்களிலும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகுகளாகப் பதிவானது.

ஆப்கனில் 7 பேர் சாவு: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கனின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள நங்கார்ஹர் மாகாணத்தில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சில குழந்தைகள் உள்பட 6 பேர் இறந்தனர். 75 பேர் காயமடைந்தனர்.

இந்த மாகாணத்திற்கு அருகில் உள்ள குணார் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இதில் பல வீடுகளும் சேதமடைந்ததாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேம்பள்ளி செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

சிவகங்கையில் டிச. 20-இல் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம்

பள்ளி திறப்பு விழா - செயற்கை நுண்ணறிவு ஆசிரியா் அறிமுகம்!

வத்தலகுண்டு பேரூராட்சிக் கடைகள் ஏலத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் அதிமுகவினா் புகாா்

கோரிக்கை மனு எழுத பொதுமக்களிடம் ரூ. 100 வசூல்: காவல் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT