"செய்தித் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்'
தில்லியில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாணவியின் ஆண் நண்பரைப் பேட்டி கண்டு ஒளிபரப்பிய செய்தித் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அமெரிக்கப் பத்திரிகையாளர் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
தில்லியில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாணவியின் ஆண் நண்பரைப் பேட்டி கண்டு ஒளிபரப்பிய செய்தித் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அமெரிக்கப் பத்திரிகையாளர் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படையாக தெரிவிப்பது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில், மாணவியின் ஆண் நண்பரின் பேட்டியை ஒளிபரப்பிய ஜீ நியூஸ் சேனல் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக தில்லி மாநகர போலீஸ் செய்தித் தொடர்பாளர் ராஜன் பகத் தெரிவித்தார்.
இந்நிலையில், அந்தத் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த சி.பி.ஜே. என்ற பத்திரிகையாளர் அமைப்பு, தில்லி போலீûஸக் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் ஆசியத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாப் டயட்ஸ் கூறியது:
தில்லியில் வன்கொடுமையால் மாணவி உயிரிழந்தார். அந்தக் கொடூரமான குற்றம் தொடர்பான தகவல்களை ஊடகங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன. ஆனால், பலாத்காரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் உரிமைகளைக் காப்பது என்ற பெயரில் அதிகாரிகள், செய்தி ஊடகங்களை ஒடுக்குகின்றனர். குறிப்பிட்ட செய்தி சேனலின் மீது குற்றச்சாட்டுகள் பதிந்து நடவடிக்கை எடுக்கும் தவறான நடவடிக்கையை தில்லி போலீஸ் கைவிட வேண்டும் என்று பாப் டயட்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.