முகப்பு
உலகம்

சூதாட்ட குற்றச்சாட்டு: 5 இந்தியர்களை வெளியேற்றுகிறது துபை

துபை நாட்டில் பொது இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பாக 5 இந்தியர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.

Updated On : 27 டிசம்பர், 2015 at 9:14 PM
பகிர்:

துபை நாட்டில் பொது இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பாக 5 இந்தியர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.

துபையின் கடற்கரை பகுதியான பஹாய்ஹீ பகுதியில் ரோந்து வந்த காவலர்கள், அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 இந்தியர்களை பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரில், இருவரிடம் முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை.

முறையான விசாரணைக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் விரைவில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்படுவர் எனத் தெரிகிறது.

Advertisement

துபையில் வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.

குவைத் நாட்டில் சூதாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மாதம், போலீஸார் நடத்திய சோதனையின் போது சால்மியா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.