உலகம்

அடுத்த ஐ.நா. பொதுச்செயலர் தேர்வில் குட்டெரெஸ் தொடர்ந்து முன்னிலை

தினமணி

ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலர் பதவிக்கு நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்வில் போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

ஐ.நா.வின் தற்போதைய செயலர் பான் கி-மூன் பதவி இவ்வாண்டு இறுதியில் முடிவுக்கு வருகிறது. அடுத்த பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த அமைப்பின் வரலாற்றில் முதல் முறையாக, பொதுச் செயலர் பதவிக்கு விவாதம், நேர்காணல் உள்ளிட்ட தேர்வு முறையைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. முதல் கட்ட வாக்கெடுப்பு கடந்த மாதம் நடைபெற்றது. அதில் போட்டியிட்ட 12 பேரில் போர்ச்சுகலின் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் அதிக வாக்குகளைப் பெற்றதாகத் தெரிகிறது. பிரதமர் பதவி தவிர, அவர் ஐ.நா. அகதிகள் நல ஆணையத்தின் தலைவராக 10 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், பொதுச் செயலர் பதவிக்கான இரண்டாம் கட்டத் தேர்வை ஐ.நா. பாதுகாப்புக் குழு வெள்ளிக்கிழமை நடத்தியது.

பதினைந்து உறுப்பு நாடுகள் கொண்டு அந்தக் குழுவில் 11 வாக்குகள் பெற்று குட்டெரெஸ் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த இடத்தில் செர்பியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் வுக் ஜெரிமிக் உள்ளார்.

முதல் சுற்றில் போட்டியிட்ட குரோஷியா நாடாளுமன்ற துணைத் தலைவர் வெஸ்னா புஸிச் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். எஞ்சியுள்ள 11 பேரில் 6 பேர் ஆண்கள், ஐவர் பெண்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT