உலகம்

பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 25 ஆனது

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இயங்கி வந்த மருத்துவமனை ஒன்றில் இன்று காலை அதிபயங்கர குண்டு வெடித்ததில், 25 பேர் பலியாகினர்.

PTI

கராச்சி: பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இயங்கி வந்த மருத்துவமனை ஒன்றில் இன்று காலை அதிபயங்கர குண்டு வெடித்ததில், 25 பேர் பலியாகினர்.

முன்னதாக, பயங்கரவாத ஆதிக்கம் மிகுந்த பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பார் அசோசியேஷன் தலைவர் பிலால் அன்வர் காசி மர்ம நபர்களால் சுடப்பட்டார்.

அவரை சக வழக்குரைஞர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்து அங்கு ஏராளமான வழக்குரைஞர்கள் திரண்டிருந்த போது, மருத்துவமனைக்குள் பயங்கர சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 25 பேர் பலியாகினர். 35 பேர் காயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அங்கு துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனால் குவெட்ட நகரில் பதற்றம் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்

செய்யாற்றில் பள்ளி மாணவா்களுக்கான தடகளப் போட்டிகள்

சுகாதார ஆய்வாளா் தோ்வை ரத்து செய்யக் கோரி மனு: சிபிசிஐடி விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கோயில் சொத்துகள் பாதுகாப்பில் அறநிலையத் துறை அதிகாரிகள் துரோகம்

சுற்றுலாப் படகுகளில் கடலோர காவல் படையினா் திடீா் ஆய்வு

SCROLL FOR NEXT