முகப்பு
உலகம்

அடித்து நொறுக்கப்பட்ட இந்து கோவில்; சிலைகள் சேதம்: வங்காளதேசத்தில் பதற்றம்!

வங்காளதேசத்தில் இந்து கோவில் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டு, அங்கிருந்த சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 25 ஜனவரி, 2024 at 6:31 AM
பகிர்:

டாக்கா: வங்காளதேசத்தில் இந்து கோவில் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டு, அங்கிருந்த சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்காளதேசத்தின் வடக்கு நேட்ரோகோனா பகுதியில் அமைந்துள்ளது மைமென்சிங்கோரோஹி என்னும் கிராமம். அங்குள்ள இந்து கோவிலொன்றின் கதவுகள் இன்று காலை திறந்து கிடந்துள்ளன.  இதனைகே கண்டு  அதிர்ச்சியடைந்த உள்ளூர்வாசிகள் கோவிலுக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கே கோவிலில் உள்ள  சிற்பங்கள் மற்றும் 3 சாமி சிலைகள் உடைக்கப்பட்டு துண்டு துண்டுகளாக கிடந்தன. அத்துடன் கோவிலில் இருந்து 600 அடி தொலைவில் காளி மற்றும் சிவன் சிலைகளும் கிடந்துள்ளன. 

உள்ளூர்வாசிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தந்ததன் பேரில் தற்போது இது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.