பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது!
பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக தற்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தரோன்: பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக தற்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே அமைந்துள்ள தீவு நாடு பப்புவா நியூகினியா. இந்த நாட்டின் தரோன் நகரில் இன்று மாலை மிக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவாகி உள்ளது.
நில நடுக்கத்தை தொடர்ந்து பப்புவா நியூகினியாவின் கிழக்குப் பகுதியை சுனாமி பேரலைகள் தாக்கும் அபாயம் உள்ளதாக சுனாமி எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டுள்ளது.