உலகம்

மெக்சிகோ பட்டாசு சந்தையில் வெடி விபத்து: 29 பேர் பலி!

மெக்சிகோவின்  டுல்ட்டப் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பட்டாசு சந்தையில் நேற்று நிகழ்ந்த வெடி விபத்தில் 29 பேர் பலியானார்கள்

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின்  டுல்ட்டப் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பட்டாசு சந்தையில் நேற்று நிகழ்ந்த வெடி விபத்தில் 29 பேர் பலியானார்கள்

மெக்சிகோவின்  தலைநகரான மெக்சிகோ சிட்டியின் வடக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள  டுல்ட்டப் நகரில் அமைந்துள்ளது பப்லிட்டோ பட்டாசு சந்தை. இங்கே உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 3 மணி அளவில் கடும்வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 26 பேர் பலியானார்கள். 

இது குறித்து மெக்சிகோ மாகாண ஆளுநர் எருவெய்ல் அவிலா செய்தியாளர் சந்திப்பில்கூறியதாவது:

பப்லிட்டோ பட்டாசு சந்தையில் நடந்த வெடி விபத்தில் 29 பேர் பலியானார்கள். சம்பவ இடத்திலேயே 26 பேரும், பின்னர் மருத்துவமனையில் 3 பேரும் மரணமடைந்தனர். இந்த விபத்தில் 70 பேர் காயமடைந்தனர்.      அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

ஒடிஸா: அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு!

பாதுகாப்பு அம்சங்களுக்கான 5 ஸ்டார்களைப் பெற்ற கார்கள்!

அரங்கம் அதிர... அரசன் புதிய போஸ்டர்!

புதிதாக விண்ணப்பித்தோருக்கு மகளிர் உரிமைத் தொகை எப்போது? உதயநிதி அறிவிப்பு

SCROLL FOR NEXT