பாகிஸ்தானில் உளவுபார்த்த இந்தியருக்கு 3 ஆண்டு சிறை
பாகிஸ்தான் நாட்டில் உளவுபார்த்ததாகக் கூறி மும்பையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உளவுபார்த்ததாகக் கூறி மும்பையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் ஹமீத் நெகல் அன்சாரி. பொறியாளரான இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றார்.
சமூகவலைத்தளம் மூலம் நண்பரான பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவரை சந்திப்பதற்காக, ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து விசா ஏதுமின்றி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார் ஹமீத்.
Advertisement
இந்நிலையில் ஹமீத்தை காணவில்லை எனக் கூறி அவரது தாய் ஃபாயுசா பாகிஸ்தான் நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். ஹமீது இருக்கும் இடம் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு பாகிஸ்தான் அரசாங்காத்துக்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டது.
இதனிடையே, ஹமீது தங்களது பாதுகாப்பில் இருப்பதாக பாகிஸ்தான் ராணுவ உளவு இயக்குநரகம் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில் பாகிஸ்தானில் உளவுபார்த்ததாகக் கூறி ஹமீது அன்சாரிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்"னை விதித்து கைபர் மாகாணத்தில் உள்ள ராணுவ நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து ஹமீத் அன்சாரி பெஷாவார் மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.