பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்: 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் தெற்கு துறைமுக நகரமான கராச்சியில் கிளர்ச்சியாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடைபெற்ற மோதலில்....
பாகிஸ்தானின் தெற்கு துறைமுக நகரமான கராச்சியில் கிளர்ச்சியாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மோதலில் இரண்டு போலீசார் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரின் உடல்நிலை தற்போது அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கராச்சியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் போலீசார் ரெய்டு நடத்தினர். அதில், 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 4 பேர் தப்பி ஒடியதாகவும் ஜின்குவா செய்திகள் தெரிவிக்கின்றன.
Advertisement
கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லஷ்கர்-இ-ஜாங்வி மற்றும் தெஹ்ரிக்-இ-தாலிபன் குழுவை சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.