முகப்பு
உலகம்

துபை விமான நிலையப் பயன்பாடு: இந்தியர்கள் முதலிடம்

துபையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்தியதில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

Updated On : 14 ஜூன், 2016 at 4:25 PM
பகிர்:

துபை: துபையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்தியதில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

உலகிலேயே அதிகமான பயணிகள் துபையில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 69 லட்சம் பேர் இந்தி விமான நிலையத்துக்கு வந்து சென்றுள்ளனர்.

அதிலும் குறிப்பாக இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த 16 லட்சம் பேர் துபை சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த 15 லட்சம் பேர் இங்கு வந்து சென்றுள்ளனர்.

Advertisement

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 2.7 கோடி பேர் துபை விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் 34,733 விமானங்கள் வந்து சென்றுள்ளன. அது கடந்த ஆண்டைவிட 4.3 சதவீதம் அதிகமாகும்.

துபை விமான நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து பயணிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் விரைவில் தொடங்கவிருப்பதாக விமான நிலையத்தின் முதன்மை செயல் அதிகாரி பால் கிரிஃப்பித் கூறினார். பயணிகள் தங்களது பிராயண நேரத்துக்கு முன்னதாக வந்தால், விமான நிலையத்தில் உள்ள பல்வேறு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் பால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.