முகப்பு
உலகம்

துப்பாக்கிச் சூடு: பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஆர்லண்டோ செல்கிறார் ஒபாமா

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம், ஆர்லண்டோ நகரில் கேளிக்கை விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஆர்லண்டோ செல்கிறார் அதிபர் ஒபாமா.

Updated On : 14 ஜூன், 2016 at 3:04 PM
பகிர்:

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம், ஆர்லண்டோ நகரில் கேளிக்கை விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஆர்லண்டோ செல்கிறார் அதிபர் ஒபாமா.

இந்த தகவலை வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த பயணம் குறித்த மேலும் தகவல்களை வெளியிடப்படவில்லை.

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த அன்று, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருந்தால் ஒபாமா. ஆனால், இந்த துரதிருஷ்ட சம்பவத்தைத் தொடர்ந்து பிரசாரம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

கடந்த சனிக்கிழமை அன்று, கேளிக்கை விடுதிக்குள் நள்ளிரவு நுழைந்த ஒமர் சித்திக் மதீன் (29), அங்கிருந்தவர்களை நோக்கி இயந்திரத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார்.

அதையடுத்து அந்த விடுதியை போலீஸார் சுற்றி வளைத்ததைத் தொடர்ந்து, விடுதிக்குள் இருந்தவர்களில் ஏராளமானோரை ஒமர் மதீன் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்தார்.

இந்த நிலையில், அந்தக் கட்டடத்துக்குள் சிறப்புக் காவல் படையினர் அதிரடியாக நுழைந்து பிணைக் கைதிகளை மீட்டனர்.

அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒமர் சித்திக் மதீன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.