உலகம்

இங்கிலாந்து வெளிவுறவுத்துறை செயலாளர் பாகிஸ்தானுக்கு வருகை!

இரண்டு நாள் அரசு முறை பயணமாக  இங்கிலாந்து வெளிவுறவுத்துறை செயலாளர் போரிஸ் ஜான்சன் பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ளார்.

இஸ்லாமாபாத்; இரண்டு நாள் அரசு முறை பயணமாக  இங்கிலாந்து வெளிவுறவுத்துறை செயலாளர் போரிஸ் ஜான்சன் பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ளார்.

இங்கிலாந்தின் பிரதமராக தெரேசா மே பதவியேற்ற பின்பு, முதன்முறையாக அந்நாட்டின் வெளிவுறவுத்துறை செயலாளர் போரிஸ் ஜான்சன் பாகிஸ்தானுக்கு வருகை தருகிறார். அவர் இருதரப்பு மற்றும் பிராந்திய நலன் குறித்த பேச்சுவார்தைகளில் ஈடுபட உள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ள அவர், ஆப்கானிஸ்தானில் சமாதான நடவடிக்கைகள் உள்ளிட்ட பிராந்திய விஷயங்கள் குறித்தும் பேச்சு வார்த்தை  நடத்த உள்ளார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.

தனது பயணத்தில் அவர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அதிபர் மம்னூன் ஹுசைன் ஆகியோரையம் சந்திக்க உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசாமில் அவசரக்கால தரையிறங்கும் சாலையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

மகா சிவராத்திரி! வீட்டிலிருந்தே என்ன செய்யலாம்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமனம்..! ஜடேஜாவுக்கு ஏமாற்றம்!

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளில் மாற்றம்!

எனதினிய தனிமையே! சிங்கிளாக காதலர் தினம் கொண்டாடுபவர்களா?

SCROLL FOR NEXT