முகப்பு
உலகம்

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை: 1503 ஆண்டுகள் சிறை தண்டனை! 

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 1503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:47 AM
பகிர்:

கலிபோர்னியா: மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 1503 ஆண்டு சிறை தண்டனை விதித்து அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது பிரெஸ்னோ என்னும் நகரம். இந்நகரைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் தன்னுடைய மகளை சிறு வயதில் இருந்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். 2009-ம் ஆண்டு மே முதல் 2013-ம் ஆண்டு மே வரை 4 ஆண்டுகளாக இந்த கொடூரம் நிகழ்ந்து வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது 23 வயது ஆன நிலையில், அவர் காவல்துறையில் போலீசில் புகார் செய்து உள்ளார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அவளது தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

அவரை கடந்த மாதம் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் நேற்று தண்டனை விபரத்தை அறிவித்தது.அதன்படி குற்றவாளிக்கு 1503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.  தனது தீப்பில் இந்த குற்றவாளி சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவர்,” என்று நீதிபதி தெரிவித்து உள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →