முகப்பு
உலகம்

சீனாவில் கட்டுமான பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் வெடி விபத்து: 7 பேர் பலி, 94 பேர் காயம்!

சீனாவில் கட்டுமான பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் ஏழு பேர் பலியாகினர். 94 பேர் படுகாயமடைந்தனர்.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:48 AM
பகிர்:

பீஜிங்: சீனாவில் கட்டுமான பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் ஏழு பேர் பலியாகினர். 94 பேர் படுகாயமடைந்தனர்.

சீனாவின்  ஷான்ஷி மாகாணத்தில் கட்டுமான பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் இன்று மாலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் 9 பேர் பலியாகினர். 94 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தின் காரணமாக அருகாமையில் உள்ள கட்டிடங்களும் சேதம் அடைந்தன.  விபத்தின் காரணமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை தீ அணைப்பு வீரர்கள் மீட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த வெடி விபத்துக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →