உலகம்

மலேரியா இல்லாத நாடு இலங்கை!

DIN

மலேரியா காய்ச்சல் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நாடு இலங்கை என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.ஹெச்.ஓ.) அறிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மாலத்தீவுகளுக்குப் பிறகு இத்தகைய சிறப்பை இலங்கை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. கொசுக்களின் மூலம் பரவும் மலேரியா காய்ச்சல், உலகம் முழுவதும் பரவலாக காணப்படும் நோயாக உள்ளது. கடந்த 1970, 80-ஆம் ஆண்டுகளில் இலங்கையின் பல பகுதிகளில் மலேரியாவின் தாக்கம் தீவிரமாக இருந்தது. அதன் பிறகு அந்நாட்டு அரசு மேற்கொண்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகளின் காரணமாக மலேரியாவைப் பரப்பும் கொசுக்களின் உற்பத்தி படிப்படியாகக் குறைந்தது. இந்த நிலையில், மலேரியா காய்ச்சல் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங், "இலங்கை நாட்டின் குறிப்பிடத்தக்க சாதனை இது' என்றார்.
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியா, நேபாளம், இந்தோனேசியா, வங்கதேசம், கொரியா உள்ளிட்ட 11 நாடுகள் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பாதுகாப்பேன்: பிரதமர் மோடி உறுதி!

பொதுமக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் விநியோகம்

தொடா் திருட்டு: இளைஞா் கைது

திருக்குறள் உரை நூல் வெளியீடு

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT