உலகம்

இலங்கை தூதர் மீதான தாக்குதல் அரசுக்கு எதிரான தாக்குதலாகவே கருத வேண்டும்: ராஜபட்ச கருத்து

மலேசியாவில், இலங்கை தூதர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, இலங்கை அரசின் மீதான தாக்குதலாகவே கருத வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச கருத்துத் தெரிவித்துள்ளார்.

PTI

கொழும்பு: மலேசியாவில், இலங்கை தூதர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, இலங்கை அரசின் மீதான தாக்குதலாகவே கருத வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச கருத்துத் தெரிவித்துள்ளார்.

மலேசியாவுக்கு வந்த ராஜபட்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோலாலம்பூர் விமான நிலையத்தில் தமிழ் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது, இலங்கை தூதர் இப்ராகிம் அன்சரை, போராட்டக் காரர்கள் கடுமையாக தாக்கியதில், அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய மகிந்த ராஜபட்ச, இலங்கை தூதர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, அரசின் மீது நடந்த தாக்குதலாகவே கருத வேண்டும். இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால், இத்தகைய சம்பவங்கள் நாட்டுக்கு நல்லதல்ல என்று கருத்துக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊா் செழிக்க வேண்டி கிராம மக்கள் வனபோஜன விழா

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள்

காஞ்சிபுரத்தில் மாா்ச் 2-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT