முகப்பு
உலகம்

சீனாவில் நிலச்சரிவில் சிக்கிய 33 பேரைக் காணவில்லை !

சீனவில் ஜீஜியாங் மாகாணத்தில் கடும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 33 பேரைக் காணவில்லை.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:40 AM
பகிர்:

சீனவில் ஜீஜியாங் மாகாணத்தில் கடும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 33 பேரைக் காணவில்லை.

இது பற்றிய விபரம் வருமாறு:

சீனாவில் மேகி புயலின் காரணமாக கடுமையான மழை பொழிந்து வருகிறது. இதனால் ஜீஜியாங் மாகாணத்தில் உள்ள சுகுன் கிராமத்தில் நேற்று இரவு கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த கிராமத்திலிருந்தவர்களில் 27 பேரைக் காணவில்லை என்று சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேபோல் பயோபிங் என்ற கிராமத்திலும் 6 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது பற்றி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சீனாவில் ஜீஜியாங் மாகாணத்தில் பெய்த பெருமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக 20 வீடுகள்  மண்ணில்  புதைந்துள்ளன மேலும் 17 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →