உலகம்

இந்தியப்படங்களுக்கு மொத்தமாக தடை: பாகிஸ்தான் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு!

DIN

உரி ராணுவ முகாம் தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள்  மீதான இந்தியாவின் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய திரைபபடங்கள் எதையும் பாகிஸ்தானில் திரையிடுவதில்லை என்று பாகிஸ்தான் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

உரி ராணுவ முகாம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானிய நடிகர்கள்  பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு இந்திய அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அவ்வாறு நடித்துவெளியாகும்  படங்களை திரையிட விட மாட்டோம் என்றும் எதிர்ப்பு தெரிவித்தன. பாகிஸ்தான் இசை கலைஞர்கள் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன, 

இதன் தொடர்ச்சியாக 'இந்திய திரைப்படத்  தயாரிப்பாளர் கூட்டமைப்பு' என்னும் அமைப்பு இரு நாடுகளுக்கு இடையே சுமுகமான சூழல் நிலவும் வரை, பாகிஸ்தான் திரைப்படங்களை இந்தியாவில் திரையிடுவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றியது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் நடிகர்கள் மீதான தடை நீங்கும் வரை, இந்திய திரைப்படங்கள் எதையம் பாகிஸ்தானில் திரையிடுவதில்லை என்று பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பெரிய திரையரங்கத் தொடர் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

திரையரங்க உரிமையாளர்களின் இந்த முடிவானது அவர்களால் தன்னிச்சையாக மேற்கொள்ளபப்ட்டதே தவிர, பாகிஸ்தான் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தடை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT