முகப்பு
உலகம்

9/11 தாக்குதல்: இதுவரை பார்த்திராத புகைப்படங்களை எஃப்பிஐ வெளியிட்டது

2001ம் ஆண்டு அமெரிக்காவில் அல் கய்தா பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட 9/11 தாக்குதல் சம்பவத்தின் பார்த்திராத புகைப்படங்களை எஃப்பிஐ வெளியிட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:11 PM
பகிர்:


2001ம் ஆண்டு அமெரிக்காவில் அல் கய்தா பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட 9/11 தாக்குதல் சம்பவத்தின் பார்த்திராத புகைப்படங்களை எஃப்பிஐ வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐயின் ஆன்லைன் ஆர்கைவ்ஸில், நேற்று இந்த புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரட்டை கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து பென்டகன் கட்டடம் மீது சிறிய ரக விமானத்தை மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இதில் அடங்கும்.

அல் கய்தா பயங்கரவாதிகளால், விமானங்களைக் கடத்தி, உலக வர்த்தக மையம் இயங்கி வந்த இரட்டை கோபுரங்கள் மீது மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
 

இந்த சம்பவம்தான், பயங்கரவாதத்தின் மீதான அமெரிக்க பார்வையையும் நடவடிக்கையையும் மேலும் கடுமையாக்கியது. அமெரிக்கா எடுத்த தீவிர நடவடிக்கையின் மூலமாக, அல் கய்தா பயங்கரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன் 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →