உலகம்

சிரியாவில் ரசாயன குண்டு வீச்சு: 11 குழந்தைகள்  உட்பட 58 பேர் பலி!

தினமணி

டமாஸ்கஸ்: சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள ஷேக்ஹவுண் பகுதியில் இன்று காலை நடந்த ரசாயன குண்டு வீச்சில் 11 குழந்தைகள்  உட்பட 58 பேர் பலியானதாக போர் கண்காணிப்பு குழு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிரியாவின் புரட்சியாளர்களின் கைவசம் உள்ள பகுதிகளில் ஒன்று இட்லிப் மாகாணத்தில் உள்ள ஷேக்ஹவுண்.அங்கே இன்று காலை விமானங்கள் மூலம் ரசாயன குண்டுகள் வீசப்பட்டதில் 11 குழந்தைகள்  உட்பட 58 பலியானதாக சிரியாவில் இருந்து செயல்படும், போர் கண்காணிப்பு அமைப்பான 'சிரியன் அப்ஸர்வேட்டரி பார் ஹியூமன் ரைட்ஸ்' தெரிவித்துள்ளது.

ஆனால் அதே சமயம் சிரிய எதிர்கட்சிக் குழுக்களின் பேச்சுவார்த்தைக்கு குழுவானது தனது டிவிட்டர் பக்கத்தில் ,குறிப்பிட்ட இந்த தாக்குதலில் 100 பேர் பலியானதாக தெரிவித்துள்ளது.இந்த தாக்குதலில் குளோரின் வாயு அடங்கியுள்ள தேர்மோபாரிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த குழு தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த தாக்குதலில் ஈடுபட்டது சிரிய படைகளா அல்லது ரஷ்ய படைகளா என்ற விபரம் தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT