உலகம்

இனி ஆப்பிள் ஐபோன் வாட்ஸ்-அப் செய்திகளை 'சிரி' மூலம் படிக்கலாம்!

DIN

நியூயார்க்: ஆப்பிள் ஐபோன் பயனாளர்கள் இனி  தங்களது வாட்ஸ்-அப் செய்திகளை ஐபோனின் உதவி செயலியான 'சிரி' மூலம் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.   

இது தொடர்பாக அமெரிக்காவின் 'என்கேட்ஜெட்' இதழில் திங்கள் அன்று வெளியாகியுள்ள செய்தி விபரம் வருமாறு 

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் துணைநிறுவனமான வாட்ஸ்-அப் தற்பொழுது ஆப்பிள் ஐபோன் பயனாளர்களுக்கு புதிய அப்டேட்டுகளை அறிமுகபடுத்தியுள்ளது.

அதன்படி இனி ஆப்பிள் ஐபோன் பயனாளர்கள்   தங்களது வாட்ஸ்-அப் செய்திகளை ஐபோனின் அறிவுசார் உதவி செயலியான 'சிரி' மூலம் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.  இந்த வசதியானது தற்பொழுது ஐபோனின்  இயங்கு செயலியான (ஆப்ரேட்டிங் சிஸ்டம்) ஐ.ஒ.எஸ்ஸின் புதிய வடிவம் 10.3 பயன்படுத்துவோருக்கு மட்டுமே கிடைக்கிறது.  

பயனாளர்களுக்கு எளிதாக இருக்குமென்பதை தாண்டி வாகனம் ஓட்டும் பொழுது கவனம் சிதறும் அளவில் அலைபேசிகளை பயன்படுத்தி செய்திகளை பார்ப்போருக்கு, அந்த ஆபத்தில் இருந்து விடுவிக்கும் விதமாக இந்த வசதி அமைந்துள்ளது. 

இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT