உலகம்

வங்கதேச சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சிறப்பு விசா: இந்தியத் தூதரகம் அறிவிப்பு

DIN

இந்தியாவுக்குள் 5 ஆண்டுகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லும் வகையிலான சுற்றுலா விசா, வங்கதேச விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் என்று இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை பலப்படுத்தும் வகையிலான சிறப்பு நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இம்மாதத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வந்தார். அப்போது, அந்நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு 5 ஆண்டு கால இந்திய விசா வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகச் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை கூறியதாவது: 65 வயதுக்கு மேற்பட்ட வங்கதேச குடிமக்களுக்கு 5 ஆண்டு கால இந்திய விசா வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அந்தச் சலுகை அந்நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவ்வீரர்கள் 5 ஆண்டுகளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும், இந்தியாவுக்கு வந்து செல்லலாம். சுற்றுலா விசா அடிப்படையில் அவர்களுக்கு இச்சலுகை வழங்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முன் அனுமதி பெறத் தேவையில்லை வங்கதேசத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அல்லது துணைத் தூதரகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT