உலகம்

எகிப்தில் இரு ரயில்கள் மோதல்: 44 பேர் பலி

DIN

எகிப்தில் இரு ரயில்கள் மோதிக் கொண்டதில் 44 பேர் உயிரிழந்தனர்.
அலெக்ஸாண்ட்ரியா நகர் அருகே இந்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்தது. அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து தலைநகர் கெய்ரோவை நோக்கி பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே பாதையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு ரயிலின் பின் பாகத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சிலர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதுவரை 44 பேர் பலியாகியுள்ளனர். விபத்தில் நசுங்கிய ரயில் பெட்டி இடிபாடுகளில் மேலும் சில பயணிகளின் உடல்கள் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மீட்புப் பணிகள் நிறைவடைந்த பிறகுதான் பலியானோர் எண்ணிக்கை சரியாகத் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் காயமடைந்த 180 பேர் அலெக்ஸாண்ட்ரியா நகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT