உலகம்

பாகிஸ்தானில் ஏற்றப்பட்ட இந்திய தேசியக் கொடி 

DIN

நாடு முழுவதும் இன்று 71-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இந்தியாவின் 14-ஆவது குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில முதல்வர்கள் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தின நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர். 

இந்நிலையில், இந்தியாவின் 71-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்தியத் தூதர் தேசியக் கொடி ஏற்றினார். அங்கு பணிபுரியும் இந்தியர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

அதுபோலவே, ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்திலும் 71-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT