உலகம்

வெள்ளை மாளிகை வளாகத்தில் மர்மப்பை: சோதனைக்காக  தற்காலிகமாக மூடல்

DIN


வாஷிங்டன்: வெள்ளை மாளிகை வளாகத்தில் கிடந்த மர்மபையால் அதன் கதவுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளனர். பணியில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு அதிகாரிகள் நீண்ட நேரமாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை வாஷிங்டன் நகரில் உள்ளது. இந்நிலையில், உள்ளூர் நேரப்படி பகல் 1.30 மணியளவில் வெள்ளை மாளிகையின் வடக்குப்பகுதியில் உள்ள வேலியின் அருகே சந்தேகப்படும் வகையில் மர்மப்பை ஒன்று கிடந்துள்ளது.

இதனையடுத்து, ரகசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் வாஷிங்டன் போலீஸாரும் அங்கு பணியில் இருந்த அனைவரையும் வெளியேற்றிவிட்டு, அதன் கதவுகளை மூடிவிட்டு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

வெள்ளை மாளிகையின் பரபரப்பால், அப்பகுதியில் உள்ள பெனின்சுலா அவின்யு 15 மற்றும் 17 ஆம் வீதி சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து சேவைக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடந்து செல்பவர்களும் அந்த சாலை பகுதியில் அனுமதிக்கப்படவில்லை

அதிபர் டிரம்ப் அரிசோனா மாகாணத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

SCROLL FOR NEXT