ஹார்வே புயல்: இந்திய மாணவன் உட்பட 20 பேர் பலி
ஹார்வே புயலால் பாதிக்கப்பட்ட டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து இதுவரை 13,000 பேர் மீட்கப்பட்டனர். இந்திய மாணவன் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சக்திவாய்ந்த ஹார்வே புயல் தாக்கியது. இதையடுத்து அங்கிருந்த வீடு, வாகனம், மரம் உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்தன.
இந்தப் புயலை அடுத்து வரும் புதன்கிழமை வரை சுமார் 127 சென்டிமீட்டர் அளவுக்கு மழை இருக்கும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், அப்பகுதியின் அனைத்து இடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. அனைவரும் வீடுகளில் முடங்கினர். அமெரிக்காவின் தேசிய பேரிடர் மீட்புக் குழு துரிதமாக செயல்பட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதுவரை 2,300-க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள் ஹாஸ்டன் நகர தீயணைப்புத்துறை அலுவலகத்தில் பதிவாகியுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். மேலும் பலர் சிக்கியுள்ளனர்.
மொத்தம் 13,000 பேர் தேசிய மற்றும் உள்ளூர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் சிக்கி இந்திய மாணவன் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.