உலகம்

அமெரிக்க அறிவிப்புக்கு தொடரும் எதிர்ப்பு

DIN

ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவை எதிர்த்துப் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
காஸா பகுதியில் உள்ள ராஃபா நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
லெபனான், மலேசியா, ஆப்கானிஸ்தான், துருக்கி, இந்தோனேசியா உள்ளிட்ட இடங்களிலும் அமெரிக்காவின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடைபெற்றன.
ஜெருசலேம் நகரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போதிலும், நிலைமை கட்டுக்குள்ளேயே இருந்தது. பதற்றம் நிறைந்த மலைக்கோயில் பகுதியில் பலத்த காவல் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஹபீஸ் சயீதின் ஜமாதுத் தாவா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஹபீஸ் சயீத் ஆற்றிய உரையில், அணு ஆயுத நாடான பாகிஸ்தான் இஸ்லாமிய நாடுகளுக்குத் தலைமையேற்று டிரம்ப் அரசுக்குத் தக்க பதிலடி தர வேண்டும் என்று குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT