முகப்பு
உலகம்

நவாஸுக்கு எதிராக மேலும் ஒரு ஊழல் வழக்கு

கடந்த 2000-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இருவழிச் சாலை திட்டத்தில் முறைகேடு செய்ததாக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்ய

உலகம்

நவாஸுக்கு எதிராக மேலும் ஒரு ஊழல் வழக்கு

கடந்த 2000-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இருவழிச் சாலை திட்டத்தில் முறைகேடு செய்ததாக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்ய

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

கடந்த 2000-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இருவழிச் சாலை திட்டத்தில் முறைகேடு செய்ததாக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்ய அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் நகர புற நகர் பகுதிகளான ராய்விந்த்திலிருந்து நவாஸ் ஷெரீஃபின் சொந்தப் பகுதியான ஜாடி உம்ரா வரை கடந்த 2000-ஆம் ஆண்டில் இருவழிச் சாலை அமைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் முறைகேடு நடைபெற்றதன் காரணமாக, அரசுக்கு ரூ.12 கோடி (பாகிஸ்தான் மதிப்பில்) இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், இருவழிச் சாலை முறைகேடு தொடர்பாக நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃபுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய, பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது.
இந்த ஊழல் புகார் குறித்து ஷெரீஃப் சகோதரர்கள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
 

முழு கட்டுரையைப் படிக்க →