உலகம்

அமெரிக்கா வழியில் குவைத்: பாகிஸ்தான் உள்பட 5 இஸ்லாமிய நாடுகளுக்கு விசா தடை!

அமெரிக்கா வழியில் குவைத்தும் பாகிஸ்தான் உள்பட இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 5 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

DIN

குவைத் சிட்டி: அமெரிக்கா வழியில் குவைத்தும் பாகிஸ்தான் உள்பட இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 5 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது என்னும் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பானது உலக நாடுகள் பலவற்றில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அமெரிக்காவின் நட்பு நாடான குவைத்தும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிரியா, ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நாடுகளில் இருந்து அடைக்கலம் கோரி யாரும் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் அகதிகள் போர்வையில் உள்ளே நுழைந்துவிடலாம் என்ற அச்சத்தில் இந்நடவடிக்கை குவைத்தில் எடுக்கப்பட்டு உள்ளதாக குவைத்தில் இருந்து வெளிவரும் ஸ்புட்னிக் இன்டர்நேஷ்னல் நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT