உலகம்

இவருக்கு 30 வருஷமா தினம் தினம் 'செல்ஃபி தினம்'!

DIN

நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக தினந்தோறும் செல்ஃபி எடுத்து வந்த விநோத தகவல்  வெளியாகியுள்ளது.  

சமீப காலமாகதான் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகமான பிறகு 'செல்ஃபி' எனப்படும் 'தற்படம்' எடுக்கும் மோகம் அனைவரையும் பிடித்து ஆட்டுகிறது என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த  ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக தினமும் ‘செல்பி’ எடுத்து வரும் தகவல் தற்போதுவெளியாகியுள்ளது.

அவரது பெயர் கார்ல் பாடன் (64). அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் வசித்து வருகிறார். அலைபேசிகள் பயன்பாட்டிற்கு வரும் முஇன்னாரே, பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தும் தற்போதையாய் காலத்திற்கு வெகு முன்னரே 1980-ம் ஆண்டுகளின் இறுதியில் இருந்தே கார்ல் ‘செல்பி’ எடுக்கத் தொடங்கினார்.

முதலில் தன்னிடம் இருந்த சாதாரண 35 எம்.எம். கேமராவில் டிரைபோட் மற்றும் சாதாரண வெளிச்சத்தில் செல்பி எடுத்தார்.பின்னர் வேறு விதமான கேமராக்களை பயன்படுத்தத் தொடங்கினார்.

இதுவரை தான் எடுத்த செல்பி புகைப்படங்களை அவர் கண்காட்சியாக வைத்துள்ளார். மேலும் தற்போது ‘பேஸ்புக்‘ இன்ஸ்டனகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார்.

இருந்த போதிலும் செல்பி மீதான அவரது மோகம் குறையவில்லை. தனது வாழ்நாள் முழுவதும் செல்பி எடுப்பேன் என அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT